சிறுநீரகம் செயலிழந்தால் உடலில் இந்த ஐந்து அறிகுறிகள் காட்டும்!! உடனே செக் பண்ணுங்க!!

Photo of author

By Rupa

சிறுநீரகம் செயலிழந்தால் உடலில் இந்த ஐந்து அறிகுறிகள் காட்டும்!! உடனே செக் பண்ணுங்க!!

நமது உடலில் உள்ள கெட்ட கழிவுகளை வெளியேற்றும் பணியை சிறுநீரகம் தான் செய்கிறது. இந்த நவீன காலகட்டத்தில் பெரும்பான்மையானவருக்கு சிறுநீரகம் அதிவிரைவிலேயே செயலிழந்து விடுகிறது.

இதற்கு தற்போது இருக்கும் காலகட்டம் ஒரு காரணமாக இருந்தாலும் உயர் ரத்த அழுத்தம் அதிக அளவு சர்க்கரை போன்றவையும் இதில் அடங்கும். இவ்வாறு நம் சிறுநீரகம் செயலிழக்க போகிறது என்றால் நம் உடலில் 10 வித முன் அறிகுறிகள் தோன்றும்.இதை வைத்து நாம் அறிந்து கொள்ளலாம்.

உடல் எடை குறைப்பு:
சிறுநீரகம் செயலிழக்க போகிறது என்றால் திடீரென்று உடல் எடையை மாற்றம் ஏற்படும். வழக்கத்திற்கும் மாறாக 10 கிலோ அளவிற்கு எடையை குறைய நேரிடும். சிறுநீரகம் முதலில் செயலிழக்க ஆரம்பித்து விட்டாலே நமது உடலில் உள்ள புரத சத்துக்கள் குறைய தொடங்கிவிடும். இதனால்தான் நம் உடல் எடை குறைகிறது.

வாய் துர்நாற்றம்:
சிறுநீரகம் செயலிழக்கும் பட்சத்தில் நமது ரத்தத்தில் யூரியா என்ற நச்சு ஆனது அதிக அளவு கலப்பதால் நமது சுவாசம் வெளிவிடும் பொழுதே அதில் துர்நாற்றம் ஏற்பட்டுவிடும். இதை வைத்தும் நாம் கண்டு கொள்ளலாம்.

அனிமியா:
சிறுநீரகம் செயலிழக்கும் பட்சத்தில் ரத்த சோகை நோயும் வந்து விடும். இதை வைத்தும் நாம் கண்டு கொள்ளலாம்.

வறண்ட சருமம்/அரிப்பு:
நமது சிறுநீரகம் சீராக செயல்பட்டால் உடலில் எந்த ஒரு நச்சுக்கிருமையும் தேங்காது. அதற்கு மாறாக சிறுநீரகம் செயலிழக்க குறையும் பட்சத்தில் யூரியா மற்றும் கிரியேட்டின் ஆனது நமது உடலில் தங்கிவிடும். இதனால் வறண்ட சருமம் அல்லது அரிப்பு ஏற்படும்.

சுவாச பிரச்சனை:
சிறுகதைகள் செய்தாலே அதிக அளவு மூச்சு வாங்கினால் இதுவும் சிறுநீரக செயலிழப்பிற்கு ஓர் அறிகுறி தான். உடலில் இருக்கும் கழிவுகளை வெளியேற்ற முடியாமல் இருக்கும் பட்சத்தில் அந்த நீரானது நுரையீரலில் தேங்குவதால் வேலை செய்தால் கூட சுவாச பிரச்சனை ஏற்பட்டு விடும்.

கை மற்றும் கால் வீக்கம்:
நமக்கு உடலில் பெரும்பான்மையாக நீர் தேங்கி விட்டாலே அடுத்தடுத்து பல பிரச்சனைகள் உண்டாகிவிடும். சிறுநீரகம் செயலிழப்பிற்கான அடுத்த அறிகுறி தான் இந்த கை மற்றும் கால் வீக்கம்.

முதுகு வலி:
சிறுநீரகம் இருக்கும் பகுதியில் நமது உடலில் வலி ஏற்பட்டால் இதுவும் ஓர் சிறுநீரக செயலிழப்பிற்கான அறிகுறிதான். அதுமட்டுமின்றி சிறுநீரகத்தில் கல் இருந்தாலும் அலர்ஜி ஏதேனும் இருந்தாலும் சிறுநீரகம் இருக்கும் இடத்தில் வலி உண்டாகலாம்.
இத்தோடு கண் வீக்கம் அடைதல் சிறுநீரகத்தின் நிறம் மாறுதல் போன்றவை அடுத்தடுத்த அறிகுறிகளாக காணப்படும். இதில் உள்ள அறிகுறிகள் ஏதேனும் தொடர்ந்து இருக்கும் பட்சத்தில் மருத்துவரை அணுகுவது நல்லது.