காணாமல் போன மகள் மணப்பெண்ணாக மாறி வந்ததால் பெற்றோர்கள் அதிர்ச்சி! காவல்துறை சமரசம்!

0
211
Salem News in Tamil Today
Salem News in Tamil Today

காணாமல் போன மகள் மணப்பெண்ணாக மாறி வந்ததால் பெற்றோர்கள் அதிர்ச்சி! காவல்துறை சமரசம்!

சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே தெடாவூர் , 10-வார்டு, மேலவீதியில் வசித்து வருபவர் மணி அவருடைய மனைவி அங்கம்மாள்.இந்த  தம்பதிகளுக்கு பாஞ்சாலை என்ற 24 வயது மகள் உள்ளார். தீடீரென  கடந்த 16 ஆம் தேதி முதல் பாஞ்சாலையை  காணவில்லை. பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.

இதனால் அதிர்ச்சியடைந்த அங்கம்மாள் கெங்கவல்லி காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் கெங்கவல்லி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்த நிலையில் நேற்று காலையில் ஒரு காதல் ஜோடி கெங்கவல்லி காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் காணாமல் போன தெடாவூர் பகுதியைச் சேர்ந்த பாஞ்சாலை என்பவர் என தெரியவந்துள்ளது.

If the missing girl becomes a bride! Police investigation!

மேலும்  இவர் அதே ஊரை சேர்ந்த சுப்ரமணி மகன் டிரைவர் வேலு(வயது 25) என்பவரை கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இவர்கள் இருவரும் வீட்டிலிருந்து கிளம்பி திருமணம் செய்துகொண்டு கெங்கவல்லி காவல்நிலையத்தில் தஞ்சம் அடைந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து இரு வீட்டு பெற்றோரையும் அழைத்து காவல்துறையினர் பேச்சுவார்த்தையில் நடத்தினர். அப்போது இருவரின் பெற்றோரும் அவர்களின் காதலுக்கு சம்மதம் தெரிவித்து காதல் ஜோடியை அழைத்துச் சென்றனர்.

Previous articleதமிழகத்தில் இனி இந்த மரக்கன்றுகளை வளர்க்கவோ விற்கவோ கூடாது – நீதிமன்றம் அதிரடி
Next articleஇனி சில்லறை பிரச்சனை இல்லை! QR Code வழியா பஸ் டிக்கெட் – போக்குவரத்து கழகம் வெளியிட்ட தகவல்