மத்திய பிரதேசத்தை சேர்ந்த மூதாட்டி ஒருவர் தன்னை கவனித்துக் கொள்ளாத தன்னுடைய மகனிடம் இருந்து தான் எழுதிக் கொடுத்த தான பாத்திரத்தை மீட்டு தருமாறு வழக்கு பதிவு செய்து இருக்கிறார்.
மத்திய பிரதேச உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட இந்த வழக்கில் தானபத்திரத்தை மீட்டு தருவது குறித்து அந்நீதிமன்றத்தின் நீதிபதி அவர்கள் கூறியதாவது, வயதான பெற்றோரை கவனிக்கவில்லை என்பதற்காக எழுதிக் கொடுத்த சொத்துக்களை மீண்டும் வாங்கிக் கொடுப்பது என்பது முடியாத காரியம் என்று தள்ளுபடி செய்யவே உடைந்து போன மூதாட்டி இந்த வழக்கினை உச்ச நீதிமன்றத்திற்கு மாற்றி இருக்கிறார்.
உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கினை விசாரித்த நீதிபதிகளான சி.டி.ரவிக்குமார் மற்றும் சஞ்சய் கரோல் ஆகியோர் இந்த மனு மீதான விசாரணையை துவங்கியிருக்கின்றனர். அப்பொழுது இந்த நீதிபதிகள் தெரிவித்திருப்பதாவது, ” மத்திய பிரதேசத்தின் உயர் நீதிமன்றமானது இந்த வழக்கினை சட்டத்தின்படி மட்டுமே அணுகியதால் இந்த தீர்ப்பினை வழங்கி இருக்கிறது” என்று தெரிவித்திருக்கின்றனர்.
மேலும், மூத்த குடிமக்களுடைய உணர்வுகளை பாதுகாக்கும் விதமாக சிந்திக்க வேண்டும் என கூறிய நீதிபதிகள், வயதான பெற்றோரை கவனிக்கவில்லை என்றால் பிள்ளைகளிடமிருந்து சொத்துக்களை திரும்ப பெற்றுக் கொள்ள அதாவது தான பத்திரத்தை திரும்ப பெற்றுக் கொள்ள முடியும் என்று தீர்ப்பளித்திருக்கிறது.
குறிப்பாக, அந்தத் தான பத்திரத்தைச் செல்லாது என்று அறிவிக்க 2007 சட்டத்தின் பிரிவு 23 சட்டத்தில் இடம் இருப்பதாகவும் கூறப்பட்டிருக்கிறது. அதாவது இந்த சட்டத்தில் பெற்றோர் பராமரிப்பு, மூத்த குடிமக்கள் மற்றும் நல வாழ்வு குறித்த விதிகள் அமைந்திருக்கின்றன.
இனி வயதான பெற்றோரிடமிருந்து சொத்துக்களை பெற்றுக்கொண்டு அவர்களை கவனிக்காமல் விடும் அனைத்து பிள்ளைகளுக்கும் இது சரியான பாடம் கற்பிக்கும் முறையாக அமையும் என்று அனைவராலும் நம்பப்படுகிறது.