ஆழ்ந்த தூக்கத்தில் திடீரென்று அதிர்வு ஏற்பட்டால் கட்டாயம் உடலில் இந்த பிரச்சனை உள்ளது என்று அர்த்தம்!! தெரிந்து கொள்ளுங்கள்!!

0
144
If there is a sudden vibration during deep sleep, it means that there is this problem in the body!! Find out!!
If there is a sudden vibration during deep sleep, it means that there is this problem in the body!! Find out!!

மனிதர்களுக்கு உடல் ஓய்வு என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும்.நாள் முழுவதும் கடினமாக உழைத்தாலும் உரிய நேரத்தில் தூக்கத்தை அனுபவித்துவிட வேண்டும்.நிம்மதியான தூக்கம் உடல் மற்றும் மனதை ஆரோக்கியமாக வைக்கும் மருந்தாகும்.

சிலருக்கு குறட்டை விடுதல்,இரவில் மூச்சு விடுதலில் சிரமம்,இருமல்,கனவுகள் உள்ளிட்ட காரணங்களால் நிம்மதியான தூக்கம் தடைபடும்.அதேபோல் தூக்க நிலைக்கு சென்ற ஒரு சில நிமிடங்களில் திடீரென்று உடல் அதிர்வு ஏற்படும்.இந்த உணர்வு அனைவருக்கும் ஏற்படக் கூடியவை தான்.

அயர்ந்த உறக்க நிலைக்கு சென்றதும் மலையில் இருந்து கீழே விழுவது போன்ற உணர்வு,படுக்கையில் இருந்து கீழே விழுவது போன்ற உணர்வால் திடீரென்று உறக்கம் தடைபடும்.

மன அழுத்தம்,முறையற்ற தூக்கம் உள்ளிட்ட காரணங்களால் இந்த உடல் அதிர்வு ஏற்படுகிறது.இது விழிப்பு நிலையில் இருந்து தூக்க நிலைக்கு செல்லும் நேரத்தில் உண்டாகிறது.

தூக்கத்தில் உடல் அதிர்வு ஏற்படக் காரணம்?

நமது உடல் சோர்வடைந்து தூக்க நிலைக்கு செல்லும் பொழுது உடலின் வெப்பநிலை குறைந்து உடல் உறுப்புக்கள் ஓய்வு நிலைக்கு செல்கிறது.இதனால் உடல் இயக்க நிலையில் இருந்து ஓய்வு நிலைக்கு செல்கிறது.அச்சமயத்தில் உடலிலுள்ள நரம்புகள் உடலை மீண்டும் இயக்க சொல்லி மூளைக்கு சிக்னல் கொடுக்கும்.உடல் உறுப்புகளின் திடீர் ஓய்வால் நரம்புகள் குழம்பி இப்படி மூளைக்கு எச்சரிக்கை கொடுக்கின்றது.நரம்புகள் கொடுக்கின்ற இந்த எச்சரிக்கையால் உடலில் அதிர்வு உண்டாகிறது.தூக்க நிலையில் திடீர் உடல் அதிர்வு ஏற்படாமல் இருக்க உடல் மற்றும் மனதை ஆரோக்கியமாக வைத்திருப்பது அவசியமாகும்.

Previous articleமுருகனுக்கு இப்படி ஒரு முறை விரதம் இருந்தால் கேட்டது கிடைக்கும்!! நீண்ட நாள் கனவு பழிக்கும்!!
Next articleபெண்கள் உங்களின் Stress குறைய நெற்றியில் இப்படி பொட்டு வையுங்கள்!!