விந்தணுவில் இந்த மாற்றம் இருந்தால்.. இந்த ஜென்மத்தில் உங்கள் துணையை கருத்தரிக்க வைக்க முடியாது!!

Photo of author

By Divya

திருமணமான தம்பதிகள் சில மாதங்களில் கருத்தரிக்காவிட்டால் நிச்சயம் அவர்களை உறவினர்கள் மற்றும் சமுதாயம் ஏளனமாக தான் பார்க்கும்.இதனால் அவர்கள் மனதளவில் கடுமையான பாதிப்புகளை சந்திக்கின்றனர்.

தற்பொழுது இந்தியாவில் குழந்தையின்மை பிரச்சனை அதிகரித்து வருகிறது என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது.இதற்கு முக்கிய காரணம் நாம் பின்பற்றும் வாழ்க்கைமுறை தான்.ஆரோக்கியம் இல்லாத உணவுமுறை பழக்கத்தால் ஆண்மை குறைபாடு,விந்து குறைபாடு,கருப்பை சார்ந்த பாதிப்பால் கருத்தரிப்பு தாமதமாதல் அல்லது குழந்தையின்மை பிரச்சனையை சந்திக்க நேரிடுகிறது.

முன்பெல்லாம் குழந்தையின்மை பிரச்சனை என்றால் பெண்களை தான் குறை சொல்வார்கள்.ஆனால் தற்பொழுது ஆண்கள் தான் குழந்தையின்மை பிரச்சனைக்கு முக்கிய காரணமாக இருக்கிறார்கள்.ஆரோக்கியம் இல்லாத வாழ்க்கை முறை,உணவுமுறை பழக்கத்தால் தான் ஆண்களுக்கு விந்தணு குறைபாடு,மலட்டு தன்மை,நீர்த்த விந்து வெளியேறுதல்,விந்தணு தரம் குறைதல் போன்ற காரணங்களால் தான் தற்பொழுது கருத்தரிப்பு சவாலாக இருக்கிறது.

ஆண்களின் விந்தணு தரம் இல்லை என்பதை சில அறிகுறிகள் வைத்து தெரிந்து கொள்ளலாம்.பொதுவாக ஆண்களின் விந்தணு உற்பத்தி 16 மில்லியனுக்கு அதிகமாக இருந்தால் மட்டுமே துணையை கருத்தரிக்க வைக்க முடியும்.

ஒருவேளை 16 மில்லியனுக்கும் குறைவான அளவு விந்தணு உற்பத்தி இருந்தால் அது குழந்தை பிறப்பு சாத்தியமற்றதாக மாறிவிடும்.என்ன முயற்சித்தாலும் தங்கள் துணையை கருத்தரிக்க வைப்பது கடினமாகிவிடும்.

விந்தணு அளவு நல்ல நிலையில் இருந்தால் மட்டுமே அது ஆரோக்கியமானது என்று கருதப்படும்.ஆண்களுக்கு நரம்பு தளர்ச்சி,நரம்பு சுருட்டல் போன்ற பாதிப்புகள் ஏற்பட்டால் விந்தணு தரம் மற்றும் உற்பத்தி குறைந்துவிடும்.

வெளியேற்றும் விந்வில் துர்நாற்றம் வீசினாலோ அல்லது விந்து நிறம் மாறி இருந்தாலோ அதன் தரம் குறைந்துவிட்டது என்று அர்த்தம்.இந்த பிரச்சனை இருந்தால் துணையை எளிதில் கருத்தரிக்க செய்ய முடியாது.

ஆணின் உச்சக்கட்ட இன்பத்தின் போது விந்து வெளியேறாமல் இருப்பது அது ஆரோக்கியமற்ற விந்துவிற்கான காரணங்கள் ஆகும்.சிலருக்கு பாலியல் மீதான ஈர்ப்பு குறைந்துவிடும்.அதேபோல் விறைப்புத் தன்மை குறைபாட்டை சிலர் சந்திக்க நேரிடும்.இதுபோன்ற பிரச்சனைகள் விந்தணு தரம் குறைந்துவிட்டது என்பதை உணர்த்துகிறது.இதுபோன்ற அறிகுறிகள் இருந்தால் அலட்சியம் கொள்ளாமல் ஆரோக்கிய உணவுகள் உட்கொண்டு உரிய தீர்வு காண வேண்டியது மிகவும் முக்கியமாகும்.