உங்கள் வீட்டில் உள்ள அம்மா மனைவி குழந்தைகள் மகாலட்சுமி தாயாருக்கு மிகவும் பிடித்தமான ராசிகளில் பிறந்திருந்தால் அவர்களை ஒருபோதும் அழவைக்க கூடாது. அவர்கள் அழுதால் வீட்டில் பணம் முதலான அனைத்து செல்வத்துக்கும் தட்டுப்பாடு ஏற்படும். எனவே அவர்களை சிரிக்க வைத்து மகாலட்சுமியின் பரிபூரணமான அருளையும், சௌபாக்கியங்களையும் பெற்று வாழ வேண்டும்.
ஆண்கள் மிகவும் கஷ்டப்பட்டு உழைப்பார்கள். ஆனால் ஒரு சிலருக்கு உழைப்புக்கு ஏற்ற ஊதியம் கிடைப்பதில்லை. ஒரு சிலருக்கு ஊதியம் கிடைத்தாலும் அது வீண் விரயம் ஆகக் கூடும். இல்லை என்றாலும் கூட வீட்டில் ஏதேனும் ஒரு பிரச்சனைகள் இருந்து கொண்டே இருக்கும். ஏன் இவ்வாறு பிரச்சனைகள் ஏற்பட்டு கொண்டே இருக்கிறது? வாழ்க்கையில் ஏன் முன்னேற முடியவில்லை? என்றால் அதற்கு காரணம் அந்த வீட்டில் இருக்கும் பெண்கள் தான்.
சில பெண்கள் அதிர்ஷ்டத்துடன் பிறந்திருப்பார்கள், சில பெண்கள் தெய்வக் கடாட்சத்துடன் பிறந்திருப்பார்கள், சில பெண்கள் பூர்வ ஜென்ம கர்மாவினால் துரதிஷ்டசாலியாக பிறந்திருப்பார்கள். இதுபோன்ற எப்படிப்பட்ட பெண்களாக இருந்தாலும் சரி இந்த ஐந்து ராசிக்கார பெண்களை அழ வைத்தால் வாழ்க்கையில் முன்னேறவே முடியாது.
அப்பொழுது மற்ற ராசிக்கார பெண்கள் அழுதால் அந்த குடும்பம் முன்னேறுமா? என்று கேட்டால் அதுவும் கிடையாது. ஏனென்றால் எந்த ராசிக்கார பெண்களும் வீட்டில் அழக்கூடாது. குறிப்பாக இந்த ஐந்து ராசிகார பெண்கள் வீட்டில் அழுதால், அது அந்த தெய்வத்திற்கே பிடிக்காதாம்.
இன்றைய காலத்தில் ஜாதகம், நாள், நட்சத்திரம் ஆகியவற்றை பார்த்து தான் திருமணம் செய்து வைக்கிறார்கள். ஆனால் முந்தைய காலங்களில் ஜாதகம் என்று எதுவும் கிடையாது. நட்சத்திர நாட்கள் மட்டுமே இருக்கும். எனவே ரோகிணி மற்றும் சுவாதி நட்சத்திர நாட்களில் மட்டுமே அந்த காலங்களில் திருமணங்களை நடத்தி வைப்பார்கள்.
ஏனென்றால் இந்த இரண்டு நட்சத்திரங்கள் தான் சந்திரனுக்கு மிகவும் பிடித்தமான நட்சத்திரமாகும்.
இந்த இரண்டு நட்சத்திரத்தின் பொழுது திருமணம் செய்து வைத்தால், கணவன் மனைவிக்கு இடையே எந்தவித பிரச்சனையும் ஏற்படாமல் அன்யோன்யமான வாழ்க்கை வாழ்வார்கள் என்று நமது முன்னோர்கள் திருமணத்தை செய்து வைத்தனர்.
இது போன்ற நாள், நட்சத்திரத்தைப் பார்த்து திருமணம் செய்து வைத்தால் தான் கணவன் மனைவிக்கு இடையே எந்தவித பிரச்சனையும் ஏற்படாமல் குடும்பம் நிம்மதியாக இருக்கும். அந்த குடும்பத்தில் உள்ள பெண்களும் சந்தோஷமாக இருப்பார்கள்.
அதேபோன்று பெண்கள் வீட்டையும், தன்னையும் எப்பொழுதும் சுத்தபத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். தினமும் வீட்டில் தீபம் ஏற்ற வேண்டும். அப்பொழுதுதான் நேர்மறை சக்திகள் அதிகரித்து குடும்பத்தில் எந்தவித பிரச்சனைகளும் ஏற்படாமல் இருக்கும். வீட்டில் சுத்த பத்தம் இல்லாமல் எதிர்மறை சக்திகள் அதிகம் இருந்தால், அந்த குடும்பத்தில் சண்டை சச்சரவுகள், பணம் தொடர்பான பிரச்சனைகள், உடல் ரீதியான பிரச்சனைகள் இது போன்ற அனைத்து பிரச்சனைகளும் ஏற்படும்.
அப்பொழுது தான் அந்த வீட்டில் மகாலட்சுமி தாயாரும் குடி கொள்வார். இவ்வாறு மகாலட்சுமி தாயார் அமைதி மற்றும் சுத்தத்தை விரும்புவதை போன்றே இந்த ஐந்து ராசிக்கார பெண்களையும் அவருக்கு மிகவும் பிடிக்கும். 1.ரிஷபம் 2.கன்னி 3.விருச்சிகம் 4.மகரம் 5.மீனம்.
இந்த ஐந்து ராசிக்கார பெண்கள் உங்கள் வீட்டில் இருந்தால், அவர்களை அழ வைக்காமல் சந்தோசமாக வைத்துக் கொண்டால் அந்த குடும்பம் நிம்மதியையும், முன்னேற்றத்தையும் காண முடியும். மேலும் மகாலட்சுமியின் அருளும் பரிபூரணமாக கிடைக்கும்.