இப்படியே போனால் மின்சார கட்டணம் பல மடங்காகும்!! அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை!!

Photo of author

By Gayathri

இப்படியே போனால் மின்சார கட்டணம் பல மடங்காகும்!! அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை!!

Gayathri

If this goes on, the electricity bill will multiply!! Anbumani Ramadoss alert!!

சமீப காலகமாகவே மின்சார கட்டணமானது தொடர்ந்து உயர்ந்து கொண்டே வந்திருக்கிறது. தற்சமயம் கோடை காலம் வருவதையொட்டி, மின்சாரம் அதிக அளவு தேவை ஏற்படும். தற்சமயம் தமிழக அரசு குறிப்பிட்ட அளவு மின்சாரத்தை தனியாரிடமிருந்து பெற்று வருகின்றது.

கடந்த 2023 ஆம் ஆண்டில் தமிழ்நாடு மின்வாரியம் 4435 கோடி இழப்பை சந்தித்து இருந்தது. 2024 ஆம் ஆண்டும் தனியாரிடம் அதிக அளவு மின்சாரம் பெறப்பட்டுள்ளது. ஒரு யூனிட் மின்சாரம் தயாரிக்க தனியார் நிறுவனங்களுக்கு ரூபாய் ஆறுக்கும் குறைவாகவே செலவு ஆகிறது. ஆனால் அதே ஒரு யூனிட் மின்சாரத்தை அரசு 20 ரூபாய்க்கு தனியாரிடம் இருந்து பெற்றால் மின்சார வாரியம் எப்படி முன்னேற்றம் காணும் என்று அவர் பதிவிட்டுள்ளார். இப்படியே போனால் மின் கட்டணத்தை உயர்த்தி கொண்டே போக வேண்டியது தான் என அவர் தெரிவித்துள்ளார். மின்சாரம் தயாரிக்க தமிழக அரசு ஆட்களை நிர்ணயித்து அதனை பராமரித்து மேற்கொண்டு அவுட்புட் எடுத்தாலும் மட்டுமே இந்த நிலையை சரி செய்ய இயலும் என பலதரப்பட்ட மக்கள் பதிவிட்டு வருகின்றனர். குறிப்பிட்ட அளவு மின்சாரத்தை மட்டுமே தனியாரிடம் இருந்து பெறும் போது அரசு கூறும் விலைக்கு அவர்கள் விற்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும் எனவும் இதன் மூலம் புலனாகின்றது.