நம் தலைமுடி ஆரோக்கியத்தை மேம்படுத்த எண்ணெய் வைப்பதை பாரம்பரியமாக பின்பற்றி வருகின்றோம்.விளக்கெண்ணெய்,தேங்காய் எண்ணெய்,நல்லெண்ணெய் போன்றவை தலைக்கு அதிகமாக பயன்படுத்தப்படுகிறது.
முன்பெல்லாம் வாரம் ஒருமுறையாவது தலைக்கு எண்ணெய் வைத்து குளிக்கும் பழக்கத்தை முன்னோர்கள் கடைபிடித்து வந்தனர்.ஆனால் தற்பொழுது எண்ணெய் குளியல் வழக்கம் குறைந்து வருகிறது.அதேபோல் தலைக்கு எண்ணெய் வைத்து பராமரிக்கும் பழக்கமும் நம்மிடம் குறைந்து வருகிறது.
நம் தாத்தா பாட்டிமார்கள் தலைக்கு எண்ணெய் வைப்பதை வழக்கமாக வைத்திருப்பதால் தான் முடி உதிர்வு,வெள்ளை முடி பிரச்சனையை காலம் கடந்த பின்னரே சந்திக்கின்றனர்.ஆனால் தற்பொழுது இளம் வயதிலேயே பெரும்பாலானோருக்கு இளநரை,முடி உதிர்வு,வழுக்கை போன்ற பாதிப்புகள் ஏற்படுகிறது.எனவே தலைக்கு எண்ணெய் வைப்பதை அசௌகரியமாக கருதாமல் தினமும் தலைக்கு எண்ணெய் வைப்பதை வழக்கமாக்கி கொள்ளுங்கள்.
தலைக்கு எண்ணெய் வைப்பதால் உடல் சூடு முழுமையாக தணியும்.தலைக்கு எண்ணெய் வைத்தால் கண் எரிச்சல்,கண் சூடு போன்ற பிரச்சனைகள் நீங்கும்.நம் தலைக்கு நல்லெண்ணெய் வைப்பதால் உடல் சீக்கிரம் குளிர்ச்சியாகும்.
தினமும் சிறிது நல்லெண்ணெய்யை தலைக்கு வைத்தால் கோடை கால நோய்களில் இருந்து தப்பித்துவிடலாம்.நல்லெண்ணெயை தலைக்கு அப்ளை செய்து வந்தால் உடலில் பித்தம் குறையும்.கோடை காலத்தில் நல்லெண்ணெய் குளியல் அவசியமான ஒன்றாக இருக்கிறது.நல்லெண்ணெய்யை தலைக்கு அப்ளை செய்து வந்தால் முடி வளர்ச்சி நன்றாக இருக்கும்.
நல்லெண்ணெயை கண்களை சுற்றி அப்ளை செய்தால் சூடு குறையும்.தோல் நோய்கள் வராமல் இருக்க நல்லெண்ணெயை பயன்படுத்தலாம்.குளிர்காலத்தில் தேங்காய் எண்ணெயை தலைக்கு அப்ளை செய்தால் முடி ஆரோக்கியம் மேம்படும்.
தேங்காய் எண்ணெய் தடவினால் முடி வளர்ச்சி நன்றாக இருக்கும்.இளநரை,முடி வெடிப்பு,முடி உதிர்வு பிரச்சனை இருப்பவர்கள் தேங்காய் எண்ணெய் பயன்படுத்தலாம்.நல்லெண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய் ஆகிய இரண்டும் நல்லது என்றாலும் உங்களுக்கு ஏற்ற எண்ணெய் என்ன என்பது அறிந்து பயன்படுத்துவதுதான் நல்லது.