இன்றைய காலத்தில் பெரியவர்களைவிட இளம் வயதினருக்கு தான் முடி உதிர்தல்,வழுக்கை போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது.சிலருக்கு முன் நெற்றி பகுதியில் அதிக முடி உதிர்வு பிரச்சனை இருக்கும்.சிலருக்கு இரு காது ஓரங்களிலும் வழுக்கை பிரச்சனை இருக்கும்.இன்னும் சிலருக்கு உச்சி மண்டையில் முடி உதிர்வு பிரச்சனை இருக்கும்.
சிறு வயதில் தலைக்கு எண்ணெய் தேய்க்கும் பழக்கம் நம்மிடம் இருந்தது.ஆனால் தற்பொழுது வளர்ந்த பிறகு தலைமுடியை ஆரோக்கியமான முறையில் நாம் பராமரிக்காததன் விளைவாக இளம் வயதில் முடி உதிர்வு,வழுக்கை போன்ற பாதிப்புகள் ஏற்படுகிறது.அதிக மன கவலை ஏற்பட்டால் முடி உதிர்வு பிரச்சனையை சந்திக்க நேரிடும்.அதேபோல் தூக்கமின்மை காரணமாக முடி உதிர்வு பிரச்சனை அதிகளவு ஏற்படுகிறது.
நாம் நன்றாக உறங்கவில்லை என்றால் மன அழுத்தம்,மனசோர்வு போன்றவை ஏற்படக் கூடும்.சிலருக்கு மன உளைச்சல் காரணமாக முடி உதிர்வு ஏற்படுகிறது.உரிய நேரத்தில் உறங்காமல் இருப்பது,உடல் சூடு போன்ற பல காரணங்களால் முடி உதிர்வு ஏற்படுகிறது.
இது தவிர உடல் உள்ளுறுப்பான சிறுநீரகம் சூடானால் தலைமுடி உதிர்வு பிரச்சனை இருக்கும்.சிறுநீரகம் அதிக சூடாகும் பொழுது தூக்கமின்மை பிரச்சனை ஏற்படும்.இதன் காரணமாக முடி உதிர்வு ஏற்படும்.அதேபோல் கல்லீரல் சூடானால் தலைமுடி உதிர்வு அதிகளவு ஏற்படும்.
அந்த காலத்தில் தலைக்கு எண்ணெய் வைக்கும் பழக்கம் இருந்தது.ஆனால் இக்காலத்து பிள்ளைகள் எண்ணெய் வைப்பதை தவிர்ப்பதால் உடல் சூடு அதிகரிக்கிறது.சிலர் இரசாயனம் நிறைந்த பொருட்களை தலைக்கு பயன்படுத்துகின்றனர்.இதுவும் தலைமுடி உதிர்விற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
சிறுநீரகம்,கணையம்,கல்லீரல் போன்ற உறுப்புக்கள் சூடாகாமல் இருக்க நாம் தினமும் தண்ணீர் பருக வேண்டியது முக்கியம்.20 கிலோ எடை உள்ள நபர் குறைந்தபட்சம் 1 லிட்டர் தண்ணீர் பருக வேண்டும்.வறட்சியான உணவுகளை தவிர்த்தல் முடி உதிர்வு குறையும்.
உடல் சூடு தணிய முடி வளர்ச்சி அதிகரிக்க உதவும் இடுப்பு குளியல்:
முடி வளர்ச்சிக்கு இடுப்பு குளியல் பெஸ்ட் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.ஒரு குளியல் டப்பாவில் தண்ணீர் ஊற்றி இடுப்பிற்கு கீழ் உள்ள தொடை வரை நினையும் படி படுத்துக் கொள்ள வேண்டும்.கால்கள் வெளியில் நீட்டியவாறு இருக்க வேண்டும்.இந்த இடுப்பு குளியல் போட்டால் சிறுநீரகம்,கல்லீரல் போன்ற உறுப்புகளில் சூடு தணியும்.இதனால் முடி உதிர்வு,தூக்கமின்மை போன்ற பிரச்சனை நீங்கும்.