ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. இந்த தொடரில் இந்திய அணி 4 போட்டிகள் வெல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ள போது ஒரு போட்டியில் மட்டுமே வென்றது. இதனால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி வாய்ப்பை இழந்தது .
இந்த தொடர் முடிந்த பின் இந்திய அணி ரசிகர்கள் மட்டுமல்லாமல் இந்திய அணியின் முன்னாள் வீரர்களும் விராட் மற்றும் ரோஹித் இருவரும் டெஸ்ட் தொடரில் இருந்து ஓய்வை அறிவிக்க வேண்டும் கருத்து தெரிவித்து வரும் நிலையில் மறுபுறம் அடுத்த கேப்டன் பும்ரா எனவும் கூறி வருகின்றனர். இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் விராட் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
அதில் அவர் விராட் கோலி அணியில் இருந்து ஓய்வை அறிவித்தால் ஒரு அணிக்கு தான் அதிக இழப்பு அந்த அணி இந்திய அணிதான். அவர் அடுத்த போட்டியில் இரட்டை சதம் அடிப்பார். அந்த அளவிற்கு அவர் திறமை மிக்க வீரர் ஆனால் அவரை ஓய்வு அறிவிக்க சொல்லி என் கூறுகிறார்கள். நீங்கள் மறந்து விடாதீர்கள் நீங்கள் ஓய்வு பெற சொல்வது விராட் கோலியை . நான் கேப்டனாக இருந்திருந்தால் அவருக்கு ஓய்வு அளிக்க கூடாது என்று தேர்வு குழுவுடன் சண்டை போடுவேன் என்று கூறியுள்ளார்.