சாப்பிட்டதற்கு பணம் கேட்டால் கடையை உடைப்போம்! கோயம்புத்தூரில் அரங்கேறிய பகீர் சம்பவம்!
சமீபகாலமாகவே கோயம்புத்தூர் சென்னை போன்ற பகுதிகளில் கலவரங்கள் நடந்து வருகிறது.இந்த கலவரங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது தவிர குறைவதற்கான வாய்ப்புகள் ஏதும் தெரியவில்லை. அந்த வகையில் தற்பொழுது கோயம்புத்தூரில் நடந்துள்ள சம்பவம் அனைவரையும் கோபம் அடைய செய்கிறது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் பீலமேடு என்ற பகுதி உள்ளது .அந்த பீளமேடு பகுதியில் ஆஞ்சநேயர் பேக்கிரி ஒன்றை ஒரு நபர் நடத்தி வருகிறார். சிலர் அங்கு வந்து சாப்பிட்டு விட்டு பணம் கொடுக்காமல் சென்று வருவது தொடர்ந்து நடந்து வந்துள்ளது. இதனால் அங்கு யார் சாப்பிட வந்தாலும் முதலில் பணத்தை பெற்றுக்கொண்டு அதன் பின் அவர்கள் கேட்பதை கடை உரிமையாளர் கொடுத்து வந்துள்ளார்.
அந்த வகையில் இன்று ஒரு நபர் குளிர்பானம் குடிப்பதற்காக இந்த கடைக்கு வந்துள்ளார்.கடை உரிமையாளர் நீங்கள் பணத்தை கொடுத்து விட்டு குளிர்பானத்தை எடுத்துக் கொள்ளுங்கள் எனக் கூறியுள்ளார்.வந்தவரோ நான் என்ன ஓடிய போகப்போகிறேன் என்று கூறிவிட்டு பணத்தையும் கொடுத்து குளிர் பானத்தை வாங்கிக் கொண்டார். கடை உரிமையாளர் பணம் கேட்டதால் ,அதிகளவு கோபமடைந்த அந்த நபர் கடையின் அருகில் உள்ள மதுபான கடைக்கு சென்று தனது நண்பர்களுடன் மது அருந்தி விட்டு வந்துள்ளார். மீண்டும் அந்த கடைக்கு வந்து கடையில் வேலை பார்த்து வந்த செல்வராஜ் மற்றும் மணிகண்டன் ஆகியோரை சரமாரியாக அந்த 6 பேர் கொண்ட கும்பல் தாக்கியுள்ளது.
தாக்கியது மட்டுமல்லாமல் கடையை அடித்து உடைத்து நாசம் செய்துள்ளது. அதனை அடுத்து கல்லாப் பெட்டியில் இருந்த ரூ 4000 திருடிக்கொண்டு ஓடி விட்டனர். இதனைக் குறித்து அப்பகுதி பீளமேடு காவல் நிலையத்தில் கடை உரிமையாளர் புகார் அளித்துள்ளனர்.காவல்துறையினர் இந்த புகாரை பெற்றுக் கொண்டு ஆறு பேர் கொண்ட கும்பலை தீவிரமாக தேடி வந்தனர்.அதில் இசக்கி முத்து கௌதம், அருள்நந்தி,தினேஷ், மணி மற்றும் இவர்களுடன் 16 வயது தக்க சிறுவனையும் போலீசார் கைது செய்துள்ளனர். இந்த ஆறு பேர் கொண்ட கும்பல் கடையை அடித்து நொறுக்கிய வீடியோவானது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. தமிழ்நாட்டில் சமீபகாலமாக உணவு உண்டுவிட்டு பணம் கொடுக்காமல் இவ்வாறு தகராறு செய்வதும் தொடர்ந்து நடந்த வண்ணமாகவே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.