நாங்கள் ஆட்சி வந்தால் முதலில் இந்த அமைச்சரை தான் கைது செய்வோம்! பாஜக அண்ணாமலை கெடுபிடி பேச்சு !
முதல் நாளில் முதல் ஆளாக கைது செய்யப்படுவார் செந்தில்பாலாஜி என பாஜக தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.இது கட்சிக்கிடையே பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. கோவை மசக்காளிப்பாளைத்தில் பாஜக அரசின் 8 ம் ஆண்டு சாதனை பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் வெளியுறவுத்துறை இணை அமைச்சர் முரளிதரன் மற்றும் பாஜக நிர்வாகிகள் என பலரும் கலந்துகொண்டனர். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நேற்று மதுரை தல்லாகுலத்தில் செய்தியாளைர்களை சந்தித்து பேசினார்.
தமிழக மின்சார வாரியத்தின் ரூ.4,442 கோடி மதிப்பிலான மின் திட்ட ஒப்பந்தம் அனைத்து விதிகளையும் மீறி பி.ஜி.ஆர் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. நேஷனல் ஹெரால்டு வழக்கில் மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நாளை மீண்டும் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் முன்பாக ஆஜராக உள்ளார். அதனால், டெல்லியில் ராகுல் காந்தி விசாரணைக்கு ஆஜரானதற்கு காங்கிரஸ் கட்சியின் எம்.பி.க்கள் தேவையில்லாத போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
அதேபோல கேரளாவில் தங்கக் கடத்தலில் மீது கைது செய்யப்பட்ட குற்றவாளி முதலமைச்சர் மீது குற்றச்சாட்டியுள்ளார். ஆனால் இதுவரை தமிழகத்தை சேர்த்த காங்கிரஸ் கட்சி தலைவர் மற்றும் முதலமைச்சரும் இதை பற்றி ஏதும் பேசவில்லை. காங்கிரஸ் கட்சியினர் டெல்லியில் மக்களுக்கு இடையூறு செய்யும் வகையில் ராகுல்காந்திக்காக போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
திமுக அட்சிக்கு வந்தவுடன் பாஜகவினர் மீது 21 வழக்குகள் போடப்பட்டு கைது செய்துள்ளனர்.இது அவர்களின் முன்விரோதத்தை காட்டுகிறது. மத்திய அரசு சில ஆண்டிற்குள் 10 லட்சம் பேருக்கு வேலை வழங்க உள்ளது. அதில் அக்னிபத் முறை கொண்டு வர வேண்டும் என்று கூறினார்.மேலும் தமிழக மின்சார வாரியத்தின் மின் திட்ட ஒப்பந்ததின் படி அனைத்து விதிகளையும் மீறி திமுக பி.ஜி.ஆர் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. ஆதலால், எங்களிடம் அனைத்து ஆதாரங்களும் இருக்கிறது இதிலிருத்து மின்சாரத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தப்பிக்க முடியாது. தற்போது தமிழக அரசு மாறும்போது முதல்நாள் முதல் ஆளாக செந்தில்பாலாஜியை தான் கைது செய்யப்படுவார் என பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்..