பெரம்பலூர் மாவட்ட கோவில் ஆக்கிரமிப்பு நிலங்கள் மிக விரைவில் மீட்க்கப்படும்! அமைச்சர் அதிரடி பேட்டி!

0
81

பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் மற்றும் செல்லியம்மன் கோவில் உள்ளிட்டவற்றை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு செய்தார். அதன்பிறகு பத்திரிகையாளர்களுக்கு அவர் பேட்டி அளித்தார்.

அப்போது அவர் தெரிவித்ததாவது தமிழகத்தில் இருக்கின்ற இந்து சமய அமைப்புகள் மூலமாக நடத்தப்படும் ஆலயங்களில் பக்தர்கள் தரிசனத்திற்கு ஏற்ற விதத்தில் இருக்க வேண்டும் என்று முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

அந்த விதத்தில் பெரியசாமி, மலைச்சாமி, என்னும் செல்லியம்மன் கோவிலில் 6 மாத காலமாக நடந்து வரும் பிரச்சனைகளை துறை ரீதியாக ஆய்வு செய்வதற்காக ஆணையாளர் குமரகுருபரன் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீ வெங்கடபிரியா, மாவட்ட கழக செயலாளர், அதிகாரிகளுடன் ஆய்வு செய்ய வந்திருக்கிறேன் என்றும், அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் செல்லியம்மன் கோவிலில் ஏற்கனவே உடைத்து எறியப்பட்ட சிலைகள் அனைத்தும் மீண்டும் நிறுவும் பணி நடைபெற்று வருகிறது. பக்தர்கள் சிரமமின்றி வந்து செல்வதற்காக சாலை பணிகளை மாவட்ட ஆட்சியர் முழுவீச்சில் செய்து வருகிறார் என்று தெரிவித்துள்ளார்.

அதேபோல 2014 ஆம் ஆண்டில் பாலாலயம் செய்யப்பட்ட மதுர காளியம்மன் ஆலய திருப்பணிகளை விரைந்து முடித்து ஆகஸ்ட் மாதத்திற்குள் குடமுழுக்கு விழா நடத்த அறிவுரை வழங்கி இருக்கிறோம். அனைத்து பணிகளும் ஒரு வருடத்திற்கு முடிவடையும் என்று தெரிவித்துள்ளார்.

பெரியசாமி கோவில் பழமை மாறாமல் புதுப்பிக்க இந்து சமய அறநிலையத்துறை அதிக அக்கறை எடுத்துக் கொள்ளும் மறுபடியும், இங்கே அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க காவல் துறை இந்து சமய அறநிலையத்துறை வருவாய்த்துறை உடன் கலந்து ஆலோசித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளார்.

அதோடு யூடியூபர் ஒருவர் கோவில் திருப்பணி என்ற பெயரில் பல லட்சம் ரூபாய் பணம் வசூல் செய்தது குறித்து கேள்வி எழுப்பிய போது அதற்கு பதிலளித்த அமைச்சர் சேகர்பாபு இந்து சமய அறநிலையத்துறையை பொறுத்தவரையில் அவர் முறையாக பணிகளை மேற்கொள்ளவில்லை.

ஆனால் வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கின்ற காரணத்தால் கருத்துப்பரிமாற்றம் ஏற்புடையதாக இருக்காது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் திருக்கோவிலுக்கு சொந்தமான ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்பதற்கு 38 வருவாய் மாவட்டங்களில் வட்டாட்சியர், சர்வேயர், உதவியாளர்கள், என 114 பணியிடங்கள் ஒரு வருடத்திற்கு ஏற்படுத்தப்பட்டு மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதுவரையில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டை கோயில்களுக்கு சொந்தமான இடங்களில் இந்து சமய அறநிலையத்துறை கல் பதித்து வேலி அமைத்து வருகிறது என்று தெரிவித்துள்ளார்.

கோவிலுக்குச் சொந்தமான நிலத்தை பட்டா மாற்றம் செய்ததால் ஒத்துப்போகும் பட்டா, ஒத்துப்போகாத பட்டா, என்று 2 வகையாகப் பிரித்து பதிவேற்றம் செய்து வருகின்றோம். இதில் ஒத்துப்போகாததாக இருந்தால் மாவட்ட ஆட்சியர் மூலமாக மேல்முறையீடு செய்து மீட்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பெரம்பலூர் மாவட்டத்தை பொருத்தவரையில் ஆக்கிரமிப்பு கோவில் இளங்கலை கணக்கெடுத்துகொண்டு இருக்கின்றோம். அவை வெகு விரைவில் மீட்கப்படும் இதுவரையில் நிலுவையில் இருந்த நூற்றுக்கும் மேற்பட்ட கோவில் நிலங்கள் வாடகை பிரச்சனை உள்ளிட்டவை தீர்த்து வைக்கப்பட்டுள்ளன என்றும் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் 1 வருடத்தில் எதுவும் நடைபெறவில்லை லஞ்ச லாவண்யம் தலைவிரித்தாடுகிறது என்று பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவிப்பது தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் 5 வருடங்கள் மக்களால் அங்கீகரிக்கப்பட்ட ஆட்சி தமிழகத்தில் நடைபெறுகிறது.

ஜனநாயகத்தின் மீது திமுகவிற்கு நம்பிக்கை இருக்கிறது, நாங்கள் ஆக்கபூர்வமான பணிகளை நோக்கி நடைபோட்டுவரும் பொது மக்களின் வளர்ச்சி மகிழ்ச்சி நாட்டின் வளர்ச்சி உள்ளிட்டவற்றை நோக்கி எங்களுடைய பயணம் தொடரும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் அவருடைய குறுக்கீடுகளை போன்ற சிறுசிறு இடையூறுகளை நாங்கள் கருத்தில் எடுத்துக் கொள்வதில்லை என்றும் அவர் கூறியிருக்கிறார்.