இந்த அறிகுறிகள் இருந்தால் நமது கிட்னி FAILURE ஆக போவது என அர்த்தம்!! மக்களே தெரிந்துக்கொள்ளுங்கள்!!

Photo of author

By Rupa

இந்த அறிகுறிகள் இருந்தால் நமது கிட்னி FAILURE ஆக போவது என அர்த்தம்!! மக்களே தெரிந்துக்கொள்ளுங்கள்!!

நமது உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றுவதில் சிறுநீரகத்தின் பங்கு மிகவும் அதிகம். அது ஆபத்தில் உள்ளது என்பதை தெரிந்து கொள்ள நமது உடலில் பல மாற்றங்கள் உண்டாகும். அதை வைத்து நமது சிறுநீரகமானது செயலிழக்க போகிறது என்பதை முன்கூட்டியே தெரிந்து கொள்ளலாம். இதனை தெரியாமல் அப்படியே விட்டு விட்டால் சிறுநீரக செயலிழப்பு இதற்கென்று மாற்று அறுவை சிகிச்சை போன்றவை சந்திக்க நேரிடும்.

அதிலும் குறிப்பாக உயர் ரத்த அழுத்தம் சர்க்கரை நோய் உள்ளவர்கள் தொடர்ந்து வலி நிவாரணிகளை எடுத்துக் கொள்பவர்களுக்கு விரைவிலேயே சிறுநீரகமானது செயலிழக்கலாம். அதனை எல்லாம் தவிர்க்க அதன் அறிகுறிகள் என்ன என்பதை தெரிந்து கொள்வது நல்லது.நமது உடலானது நாள் முழுவதும் மிகவும் சோர்வாகவே இருக்கும்.அவ்வாறு இருப்பவர்களுக்கு சிறுநீரகத்தில் ஏதேனும் பிரச்சனை உள்ளது என்பதை அறிந்து கொள்ளலாம்.

பொதுவாகவே சிறுநீரகமானது ஆரோக்கியமாக இருந்தால் அது ஒரு வித ஹார்மோனை வெளியிடும். இந்த ஹார்மோனா னது உடலில் ரத்த அணுக்களை உருவாக்க உதவும். இதனால் நமது உடல் எப்பொழுதும் புத்துணர்ச்சியாக இருக்கும். மேற்கொண்டு அந்த ஹார்மோன் சுரக்கவில்லை என்றால் உடல் சோர்வாகவே காணப்படும். இதனை வைத்தே சிறுநீரகம் பாதிப்பில் உள்ளது என்பதை முன்கூட்டியே அறிந்து கொள்ளலாம்.

அதேபோல இரத்த சோகை பிரச்சனை உள்ளவர்கள் அனைவருக்கும் கட்டாயம் சிறுநீரகத்தில் கோளாறு இருக்கும். மற்றவர்களை காட்டிலும் அவர்களுக்கு உடல் ஆனது எப்பொழுதும் குளிராகவே காணப்படும். மூச்சு விடுவதில் அதிக அளவு சிரமப்பட்டாலும் சிறுநீரகத்தில் பிரச்சனை உள்ளது என்பதை அறிந்து கொள்ளலாம். அதிக அளவு தலைசுற்றினாலும் மயக்கம் ஏற்பட்டாலும் சிறுநீரகம் செயலிழக்க போகிறது என்று அர்த்தம்.

நமது உடலுக்கு ஆக்சிஜனை எடுத்துச் செல்லும் ரத்த சிவப்பு அணுக்களானது மூளைக்கு முறையாக செல்லவில்லை என்றால் மயக்கம் ஏற்படும்.இதை வைத்தே சிறுநீரகம் செயலிழப்பு குறித்து தெரிந்து கொள்ளலாம். இவ்வாறான அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவர்களை அணுகி அதற்குரிய சிகிச்சையை எடுத்துக் கொள்ளலாம்.