நாங்கள் வெற்றி பெற்றால் மோடியை சிறையில் அடைப்போம்..மிசா பாரதியின் பேச்சால் வெடித்த சர்ச்சை..!!

0
278
If we win we will put Modi in jail.. Misa Bharti's speech sparked controversy..
If we win we will put Modi in jail.. Misa Bharti's speech sparked controversy..

நாங்கள் வெற்றி பெற்றால் மோடியை சிறையில் அடைப்போம்..மிசா பாரதியின் பேச்சால் வெடித்த சர்ச்சை..!!

பீகார் மாநிலம் பாடலிபுத்திரா தொகுதில் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி சார்பாக அக்கட்சியின் தலைவர் லலு பிரசாத் யாதவ் மூத்த மகள் மிசா பாரதி போட்டியிடுகிறார். இந்நிலையில், இவர் பிரதமர் மோடியை சிறையில் அடைப்போம் என்று கூறியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

அதன்படி இதுகுறித்து மிசா பாரதி பேசியிருப்பதாவது, “பிரதமர் மோடி பீகார் வரும்போதெல்லாம் எங்கள் குடும்பத்தை ஊழல் குடும்பம் என்று விமர்சித்து வருகிறார். இந்த தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றி வெற்று மத்தியில் ஆட்சி அமைக்க மக்கள் வாய்ப்பளித்தால் மோடி உள்ளிட்ட பாஜக தலைவர்கள் சிறை கம்பிகளுக்கு பின்னால் இருப்பார்கள்” என்று கூறியிருந்தார்.

இதற்கு பாஜக தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். அதன்படி, மகாராஷ்டிரா துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், “மிசா பாரதி முதலில் தன்னை பற்றியும் தன் குடும்பத்தை பற்றியும் யோசிக்க வேண்டும். இவர்கள் எத்தனையோ ஊழலில் சிக்கியுள்ளார்கள். இதை நாங்கள் சொல்லவில்லை. நீதிமன்றமே இவர்களுக்கு தண்டனை வழங்கியுள்ளது” என்று கூறியுள்ளார்.

மேலும், இதுகுறித்து கண்டனம் தெரிவித்துள்ள பாஜக தேசிய பொதுச்செயலாளர் வினோத் தவாடே, “மிசா பாரதி எதிர்க்கட்சிகளின் பிரச்சார தரத்தை தரம் தாழ்த்தி விட்டார். பயங்கரவாதிகளை சிறையில் அடைப்போம் என்று கூறுவதற்கு பதிலாக எதிர்க்கட்சிகள் பிரதமரை மோசமாக தாக்கி பேசி வருகிறாரகள்” என்று கூறியுள்ளார்.

Previous articleசீமானுக்காக களத்தில் இறங்கி பிரச்சாரம் செய்த டிடிஎஃப் வாசன்..!!
Next articleதிருச்சிக்கு மட்டும் ஏப்ரல் 16ஆம் தேதி உள்ளூர் விடுமுறை.. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு..!!