நாம் குடிக்கும் பாலில் கால்சியம்,புரதம்,வைட்டமின்கள் நிறைந்து காணப்படுகிறது.தினமும் பால் குடித்தால் உடலுக்கு நன்மைகள் வந்து சேரும்.குழந்தைகள்,பெரியவர்கள் என்று அனைவரும் தினமும் ஒரு கிளாஸ் பால் வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.இப்படி குடிக்கும் பாலில் சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்துக் கொண்டால் இன்னும் அதிக பலன்கள் கிடைக்கும்.
மஞ்சளில் இருக்கின்ற குர்குமின் என்ற வேதிப்பொருள் உடலுக்கு பல்வேறு நன்மைகளை தருகிறது.மஞ்சள் கலந்த பால் குடித்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி கூடும்.எலும்பு சம்மந்தபட்ட பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்க பாலில் மஞ்சள் கலந்து குடிக்கலாம்.
தூக்கமின்மை பிரச்சனை இருப்பவர்கள் தினமும் இரவில் மஞ்சள் கலந்த பால் குடித்தால் நல்ல தூக்கம் வரும்.உடலில் அலர்ஜி எதிர்ப்பு பண்புகள் அதிகரிக்க பாலில் மஞ்சள் கலந்து குடிக்கலாம்.மனச்சோர்வு நீங்க மஞ்சள் கலந்த பால் பருகலாம்.
மூட்டு வலி பாதிப்பு குணமாக மஞ்சள் பால் செய்து குடிக்கலாம்.உடல் எலும்புகளின் வலிமையை அதிகரிக்க மஞ்சள் பால் செய்து குடிக்கலாம்.செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்த பாலில் மஞ்சள் கலந்து குடிக்கலாம்.சுவாசம் சம்மந்தபட்ட பிரச்சனைகள் முழுமையாக குணமாக மஞ்சள் கலந்த பால் பருகலாம்.
மஞ்சள் பால் குடித்தால் சருமம் பளபளப்பாக மாறும்.சர்க்கரை நோயாளிகள் மஞ்சள் கலந்த பால் குடித்தால் இரத்த சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருக்கும்.கல்லீரலில் தேங்கிய அழுக்கு கழிவுகள் நீங்க மஞ்சள் பாலை குடிக்கலாம்.
தோல் அரிப்பு,தோல் எரிச்சல் போன்ற பாதிப்புகளில் இருந்து மீள மஞ்சள் கலந்த பால் பருகலாம்.இரைப்பை அலர்ஜி,இரைப்பை புண் குணமாக மஞ்சள் கலந்த பால் குடிக்கலாம்.மஞ்சள் பால் சளி,இருமல்,தொண்டை கரகரப்பு போன்ற பாதிப்புகளை குணப்படுத்த உதவுகிறது.எனவே தினமும் காலை அல்லது இரவு நேரத்தில் மஞ்சள் கலந்த பால் சாப்பிடுவதை வழக்கமாக வைத்துக் கொள்ளுங்கள்.