இன்று பலருக்கு அல்சர் இருக்கின்றது.உரிய நேரத்தில் உணவு சாப்பிடாமல் இருப்பது,மோசமான உணவுகள் போன்ற காரணங்களால் வயிறு,வாய் ஆகிய இடங்களில் அல்சர் புண்கள் உருவாகி பாதிப்பை ஏற்படுத்துகிறது.இந்த அல்சர் பாதிப்பில் இருந்து மீள கீழே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை தொடர்ந்து ஒரு மாதத்திற்கு செய்யலாம்.
அல்சர் அறிகுறிகள்:-
வயிறு எரிச்சல்
ஆசனவாய் எரிச்சல்
அடிக்கடி மலம் கழித்தல் உணர்வு
உடல் எடை இழப்பு
நெஞ்செரிச்சல்
தேவையான பொருட்கள்:-
1)கெட்டி பசுந்தயிர்
2)சீரகம்
3)கற்றாழை ஜெல்
4)உப்பு
செய்முறை விளக்கம்:-
முதலில் பசுந்தயிர் கால் கப் அளவிற்கு எடுத்துக் கொள்ள வேண்டும்.பிறகு கால் தேக்கரண்டி சீரகத்தை வாணலியில் கொட்டி லேசாக வறுத்தெடுத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் இதனை ஆறவைத்து மிக்சர் ஜாரில் போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
அடுத்து ஒரு சிறு துண்டு கற்றாழை எடுத்து அதன் மேல் தோலை நீக்கிவிட்டு ஜெல்லை பாத்திரம் ஒன்றில் போட்டுக் கொள்ள வேண்டும்.பிறகு அதில் தண்ணீர் ஊற்றி அலசி எடுத்துக் கொள்ள வேண்டும்.
இந்த கற்றாழை ஜெல்லை பசுந்தயிரில் போட்டுக் கொள்ள வேண்டும்.அடுத்து வறுத்து அரைத்து வைத்திருக்கும் சீரகத்தை தயிரில் போட்டு கலக்க வேண்டும்.
அதன் பிறகு சிட்டிகை அளவு உப்பு சேர்த்து சாப்பிட வேண்டும்.இதை தினமும் காலை நேரத்தில் சாப்பிட்டு வந்தால் ஒரு மாதத்தில் அல்சர் புண்கள் ஆறிவிடும்.தயிருடன் வெந்தயம் சேர்த்து சாப்பிட்டாலும் அல்சர் புண்கள் ஆறும்.