ஒரு கிளாஸ் பாலில் இந்த ஒரு தூள் சேர்த்தால்.. உச்சி முதல் பாதம் வரையிலான நோய்கள் ஓடிப்போகும்!!

Photo of author

By Divya

ஒரு கிளாஸ் பாலில் இந்த ஒரு தூள் சேர்த்தால்.. உச்சி முதல் பாதம் வரையிலான நோய்கள் ஓடிப்போகும்!!

தினமும் காலை அல்லது மாலை நேரத்தில் டீ,காபி பதில் மஞ்சள் தூள் கலந்த பாலை குடித்து வாருங்கள்.இந்த பால் உடலுக்கு தேவையான அனைத்து ஆரோக்கிய நன்மைகளையும் வழங்குகிறது.

தேவையான பொருட்கள்:

1)பால் – ஒரு கிளாஸ்
2)மஞ்சள் தூள் – சிட்டிகை அளவு
3)கருப்பட்டி தூள் – தேவையான அளவு

செய்முறை:-

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் பால் ஊற்றிக் கொள்ளவும்.இந்த பாலை மிதமான தீயில் 2 நிமிடங்களுக்கு கொதிக்க விடவும்.

பின்னர் இதில் சிட்டிகை அளவு மஞ்சள் மற்றும் சுவைக்காக கருப்பட்டி தூள் சேர்த்து ஒரு நிமிடங்களுக்கு கொதிக்க விடவும்.

பின்னர் அடுப்பை அணைத்து இதை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி இளஞ்சூட்டில் அருந்தவும்.டீ,காபிக்கு பதில் இந்த மஞ்சள் கலந்த பால் அருந்தி வந்தால் உடலுக்கு பல வித ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும்.

மஞ்சள் சேர்த்த பால் அருந்துவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்:-

1)உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும்.

2)சளி,இருமல் பாதிப்பு இருந்தால் தினமும் இருவேளை மஞ்சள் கலந்த பால் அருந்தலாம்.

3)நிம்மதியான தூக்கம் கிடைக்க இரவு நேரத்தில் மஞ்சள் தூள் கலந்த பால் அருந்தி வரலாம்.

4)உடலில் செரிமான மண்டலம் மேம்படுவதோடு குடல் ஆரோக்கியம் அதிகரிக்கும்.

5)மூட்டு வலி போன்ற எலும்பு தொடர்பான பாதிப்புகளில் இருந்து மீள தினமும் மஞ்சள் கலந்த பால் குடிக்கவும்.

6)மனச் சோர்வு மற்றும் உடல் சோர்வை போக்க மஞ்சள் கலந்த பால் உதவுகிறது.

7)கர்ப்பிணி பெண்கள் மஞ்சள் பால் அருந்துவதால் குழந்தை ஆரோக்கியம் மேம்படும்.

8)கீழ் பக்கவாதம்,முடக்கு வாதத்தை சரி செய்ய உதவுகிறது.

9)சருமம் தொடர்பான பாதிப்புகளை சரி செய்ய இந்த மஞ்சள் பால் உதவுகிறது.