மூட்டு பகுதியில் இந்த எண்ணையை தடவினால்.. வலி இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிடும்!!

Photo of author

By Divya

மூட்டு பகுதியில் இந்த எண்ணையை தடவினால்.. வலி இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிடும்!!

Divya

கடுமையான நோய்கள் பரவும் இந்த காலகட்டத்தில் சோம்பேறி வாழ்க்கை முறை,உட்கார்ந்த நிலையில் வேலை பார்த்தல் போன்ற காரணங்களால் முதுமை காலத்தில் சந்திக்க வேண்டிய நோய்களை இளம் வயதிலேயே அனுபவித்து வருகிறோம்.

உட்கார்ந்த நிலை வாழ்க்கை முறையால் மூட்டு பகுதியில் விறைப்புத் தன்மை,வலி மற்றும் வீக்கம் ஏற்படுகிறது.உடல் பருமன் பிரச்சனை இருந்தாலும் மூட்டு வலியை சந்திக்க நேரிடும்.இந்த மூட்டு வலியில் இருந்து தங்களை காத்துக் கொள்ள கருஞ்சீரக எண்ணெயை பயன்படுத்துங்கள்.

தேவையான பொருட்கள்:-

1)கருஞ்சீரகம் – 50 கிராம்
2)விளக்கெண்ணெய் – 150 மில்லி
3)நல்லெண்ணெய் – 100 மில்லி

செய்முறை விளக்கம்:-

**முதலில் கருஞ்சீரகம் 50 கிராம் அளவிற்கு எடுத்துக் கொள்ளுங்கள்.இதை ஒரு இரும்பு வாணலியில் போட்டு குறைவான தீயில் கருகிப் போய்விடாமல் பதமாக வறுக்க வேண்டும்.

**கருஞ்சீரகம் நன்கு வறுப்பட்டு வந்ததும் அதை ஆறவைத்து மிக்சர் ஜார் இருந்தால் அதில் கொட்டி பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ளுங்கள்.மிக்சர் ஜார் இல்லாதவர்கள் கருஞ்சீரகத்தை உரலில் போட்டு இடித்து எடுத்துக் கொள்ளுங்கள்.

**பிறகு அடுப்பில் அதே இரும்பு வாணலியை வைத்து 150 மில்லி விளக்கெண்ணய் ஊற்றிக் கொள்ளுங்கள்.ஆமணக்கு விதைகளை உலர்த்தி எண்ணையாக செய்து பயன்படுத்தினால் இன்னும் நல்லது.

**விளக்கெண்ணெய்க்கு அடுத்து 100 மில்லி அளவு நல்லெண்ணெய் ஊற்றி மிதமான தீயில் சூடுபடுத்துங்கள்.

**எண்ணெய் நன்கு சூடானதும் அரைத்த கருஞ்சீரகப் பொடியை அதில் கொட்டி குறைவான தீயில் காய்ச்ச வேண்டும்.

**கருஞ்சீரக எண்ணெய் தயாரானதும் அடுப்பை அணைத்துவிட்டு இந்த எண்ணையை ஆறவைத்து ஒரு பாட்டிலில் ஊற்றி சேமித்துக்.

**பின்னர் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி சிறிது சூடுபடுத்தி எடுத்துக் கொள்ளுங்கள்.அதில் காட்டன் துணியை நினைத்து மூட்டு பகுதியில் வைத்து அழுத்தம் கொடுங்கள்.பின்னர் மூட்டு பகுதியை ஈரமில்லாமல் துடைத்துக் கொள்ளுங்கள்.

**அடுத்து கருஞ்சீரக எண்ணெயை மூட்டு பகுதியில் அப்ளை செய்து சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும்.இந்த எண்ணெயை மூட்டு பகுதியில் அப்ளை செய்தால் வலி,வீக்கத்தில் இருந்து ரிலீஃப் கிடைக்கும்.இந்த கருஞ்சீரக எண்ணெய் நாள்பட்ட மூட்டு வீக்கத்திற்கு மருந்தாக திகழ்கிறது.