இந்த ஆயிலை தொப்புளில் அப்ளை செய்தால் வயிற்று வலி மாயமாகிவிடும்!!
வயிற்றுவலி ஏற்பட்டால் அவை குணமாவதற்குள் ஒரு வழியாகி விடுவோம்.மலச்சிக்கல்,உணவு செரிமானம் ஆகாமை,உடல் சூடு போன்ற காரணங்களால் வயிற்றுவலி உண்டாகிறது.அது மட்டுமின்றி வயிற்றுப் பகுதியில் ஏதேனும் பாதிப்பு இருந்தாலும் வயிற்றுவலி உண்டாகும்.இந்த வயிற்றுவலி குணமாக மூலிகை எண்ணெயை தொப்புள் பகுதியில் அப்ளை செய்தால் உடனடி பலன் கிடைக்கும்.
1.பூண்டு
2.தேங்காய் எண்ணெய்
ஒரு இரும்பு கடாயில் 50 மில்லி தேங்காய் எண்ணெய் ஊற்றி மிதமான தீயில் சூடாக்க வேண்டும்.பிறகு அதில் ஒரு பல் பூண்டை தட்டி சேர்த்து சூடாக்க வேண்டும்.இந்த எண்ணெயை ஆறவிட்டு தொப்புளில் ஊற்றி மசாஜ் செய்து வந்தால் வயிற்றுவலி முழுமையாக குணமாகும்.
1.பெருங்காயம்
2.கடுகு எண்ணெய்
100 மில்லி கடுகு எண்ணையில் 1/4 தேக்கரண்டி பெருங்காயம் சேர்த்து சூடாக்கி கொள்ள வேண்டும்.இதை வயிற்றுப்பகுதியில் அப்ளை செய்து வந்தால் வயிறு பிடிப்பு,வயிற்றுவலி முழுமையாக குணமாகும்.
1.இஞ்சி
2.நல்லெண்ணெய்
ஒரு துண்டு இஞ்சியை சீவி இரண்டு தேக்கரண்டி நல்லெண்ணெயில் சேர்த்து காய்ச்சி வயிற்றுப்பகுதியில் அப்ளை செய்து வந்தால் வலி முழுமையாக குணமாகும்.
1.நல்லெண்ணெய்
2.தேங்காய் எண்ணெய்
3.விளக்கெண்ணெய்
இந்த மூன்று எண்ணையையும் சம அளவு எடுத்து நன்கு மிக்ஸ் செய்து வயிற்றில் ஊற்றி மசாஜ் செய்தால் வயிற்றுவலி பறந்து போய்விடும்.
1.மிளகு கீரை எண்ணெய்
ஒரு தேக்கரண்டி மிளகு கீரை எண்ணையை வயிற்றில் ஊற்றி தடவி விட்டால் வயிற்றுவலி முழுமையாக சரியாகும்.