தேமல் வெண்புள்ளிகள் மீது இந்த எண்ணெயை தடவினால்.. இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிடும்!!

Photo of author

By Divya

தேமல் வெண்புள்ளிகள் மீது இந்த எண்ணெயை தடவினால்.. இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிடும்!!

Divya

தோல் பாதிப்புகளில் ஒன்றான தேமல்,வெண்புள்ளி சருமத்தில் சீக்கிரம் பரவிவிடும் பாதிப்பாக உள்ளது.இந்த தோல் பிரச்சனைகளில் இருந்து மீள இந்த வைத்திய முறைகள் கைகொடுக்கும்.

தேவைப்படும் பொருட்கள்:

1)துளசி இலைகள் – ஒரு கப்
2)வெள்ளைப்பூண்டு பற்கள் – ஐந்து
3)மஞ்சள் தூள் – கால் தேக்கரண்டி

தயாரிக்கும் முறை:

செய்முறை 01:

முதலில் ஒரு கைப்பிடி துளசி இலைகளை ஒரு பாத்திரத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி அலசி சுத்தம் செய்து கொள்ளுங்கள்.

துளசி இலையில் பூச்சு,தூசு,மண் போன்ற அனைத்தும் நீங்கும் வரை இரண்டு அல்லது மூன்று முறை அலசி சுத்தம் செய்து கொள்ளுங்கள்.

செய்முறை 02:

பிறகு இந்த துளசி இலைகளை கல்வத்தில் போட்டு பேஸ்ட் பதத்திற்கு இடித்துக் கொள்ளுங்கள்.கல்வம் இல்லாதவர்கள் மிக்சர் ஜாரில் போட்டு சிறிது தண்ணீர் ஊற்றி பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ளுங்கள்.

செய்முறை 03:

பிறகு இதை ஒரு கிண்ணத்தில் கொட்டி வையுங்கள்.அடுத்து நான்கு வெள்ளைப்பூண்டு பற்களை எடுத்து அதன் தோலை நீக்கிவிட்டு உரலில் போட்டு பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ளுங்கள்.

செய்முறை 04:

இந்த பூண்டு பேஸ்ட்டை அரைத்த துளசி விழுதில் போட்டு நன்கு மிக்ஸ் செய்து கொள்ளுங்கள்.பிறகு கால் தேக்கரண்டி அளவிற்கு மஞ்சள் தூள் சேர்த்து நன்கு மிக்ஸ் செய்து கொள்ளுங்கள்.

செய்முறை 05:

இந்த பேஸ்ட்டை தேமல்,வெண் புள்ளிகள் மீது அப்ளை செய்து நன்கு உலர்ந்த பிறகு குளிக்க வேண்டும்.இந்த செய்முறை தொடர்ந்து ஒரு மாதம் செய்து வந்தால் தோல் சம்மந்தபட்ட பிரச்சனைகள் அனைத்தும் நீங்கிவிடும்.

தேவையான பொருட்கள்:-

1)தொட்டால் சிணுங்கி இலை – 100 கிராம்
2)மஞ்சள் தூள் – கால் தேக்கரண்டி
3)தேங்காய் எண்ணெய் – ஒரு தேக்கரண்டி

தயாரிக்கும் முறை:-

செய்முறை 01:

முதலில் தொட்டால் சிணுங்கி இலை ஒரு கப் அளவிற்கு பறித்து நன்கு உலர்த்தி பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ளுங்கள்.

செய்முறை 02:

பிறகு இந்த தொட்டால் சிணுங்கி பவுடரில் ஒரு தேக்கரண்டி அளவு கிண்ணத்தில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

செய்முறை 03:

அடுத்து அதில் கால் தேக்கரண்டி மஞ்சள் தூள் சேர்த்து ஸ்பூன் கொண்டு நன்கு கலந்து விடுங்கள்.

செய்முறை 04:

பிறகு சுத்தமான தேங்காய் எண்ணெய் ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து அதில் ஊற்றி பேஸ்ட் பதத்திற்கு கலந்து கொள்ளுங்கள்.

செய்முறை 05:

இந்த பேஸ்ட்டை தேமல்,வெண்புள்ளிகள் மீது அப்ளை செய்து வந்தால் அவை சீக்கிரம் குணமாகிவிடும்.