பாத வெடிப்பின் மீது இதை பூசினால்.. வெடிப்புகள் மாயமாய் மறைந்து போகும்!!

Photo of author

By Divya

பாத வெடிப்பின் மீது இதை பூசினால்.. வெடிப்புகள் மாயமாய் மறைந்து போகும்!!

Divya

உங்கள் பாதங்களில் ஏற்பட்ட வெடிப்புகளை செலவு இல்லாமல் எளிய வழிகள் மூலம் குணப்படுத்திக் கொள்ள இதை பின்பற்றுங்கள்.

தேவையான பொருட்கள்:-

1)அரிசி மாவு – ஒரு தேக்கரண்டி
2)கற்றாழை ஜெல் – ஒரு தேக்கரண்டி
3)தேன் – அரை தேக்கரண்டி

செய்முறை விளக்கம்:-

1.முதலில் ஒரு தேக்கரண்டி அளவு அரிசி மாவை கிண்ணம் ஒன்றில் போட்டுக் கொள்ள வேண்டும்.

2.அதன் பின்னர் கற்றாழை மடலை தோல் நீக்கிய பிறகு கிடைக்கும் ஜெல்லை நான்கு அல்லது ஐந்து முறை தண்ணீரில் போட்டு அலசி எடுத்துக் கொள்ள வேண்டும்.இதை மிக்சர் ஜாரில் போட்டு நன்கு அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

3.அதன் பின்னர் இந்த ஜெல்லை அரிசி மாவு கிண்ணத்தில் போட்டு மிக்ஸ் செய்து கொள்ள வேண்டும்.பிறகு அதில் ஒரு தேக்கரண்டி தேனை ஊற்றி நன்கு கலக்கி கொள்ள வேண்டும்.

4.பிறகு கால் பாதங்களை வெது வெதுப்பான தண்ணீரில் கழுவிய பிறகு துடைத்துக் கொள்ள வேண்டும்.இப்பொழுது அரிசி மாவு கலவையை பாத வெடிப்புகள் மீது பூசி ஸ்க்ரப் செய்ய வேண்டும்.

5.அதன் பிறகு குளிர்ந்த நீரில் கால்களை கழுவி சுத்தம் செய்ய வேண்டும்.இதை தொடர்ந்து செய்து வந்தால் கால் பாத வெடிப்பு குணமாகும்.

தேவையான பொருட்கள்:-

1)வேப்ப எண்ணெய் – இரண்டு தேக்கரண்டி
2)மஞ்சள் தூள் – ஒரு தேக்கரண்டி

செய்முறை விளக்கம்:-

வேப்ப எண்ணையை வாணலி ஒன்றில் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.பிறகு அதில் ஒரு தேக்கரண்டி மஞ்சள் தூள் சேர்த்து சூடாக்கி அடுப்பை அணைக்க வேண்டும்.

இந்த எண்ணெயை ஆறவைத்து கால் பாத வெடிப்புகள் மீது தடவி வந்தால் அவை சீக்கிரம் குணமாகும்.

தேவையான பொருட்கள்:-

1)மருதாணி இலைகள் – ஒரு கைப்பிடி
2)மஞ்சள் தூள் – அரை தேக்கரண்டி

செய்முறை விளக்கம்:-

முதலில் ஒரு கைப்பிடி மருதாணி இலையை மிக்சர் ஜாரில் போட்டு பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

அதன் பின்னர் மஞ்சள் தூள் சிறிதளவு சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து கால் பாத வெடிப்புகள் மீது பூசினால் அவை சீக்கிரம் மறைத்துவிடும்.