சொத்தை நகத்தின் மீது இதை தடவினால்.. ஒரே இரவில் தீர்வு கிடைத்துவிடும்!!

Photo of author

By Divya

சொத்தை நகத்தின் மீது இதை தடவினால்.. ஒரே இரவில் தீர்வு கிடைத்துவிடும்!!

Divya

உங்கள் கை,கால் விரல் சொத்தையை குணமாக்க இந்த வீட்டு வைத்தியங்களை முயற்சி செய்து பாருங்கள்.நிச்சயம் நல்ல பலனை காண்பீர்.

தேவையான பொருட்கள்:-

1)மஞ்சள் தூள் – ஒரு தேக்கரண்டி
2)கல் உப்பு – ஒரு தேக்கரண்டி
3)தண்ணீர் – ஒரு கிளாஸ்

பயன்படுத்தும் முறை:-

ஒரு தேக்கரண்டி மஞ்சள் தூள் மற்றும் ஒரு தேக்கரண்டி கல் உப்பை மிக்சர் ஜாரில் போட்டு ஒரு சுத்துவிட வேண்டும்.

பின்னர் இதில் தண்ணீர் ஊற்றி பேஸ்ட் பதத்திற்கு குழைத்துக் கொள்ள வேண்டும்.அதன் பிறகு அடுப்பில் பாத்திரம் வைத்து தண்ணீர் ஊற்றி சூடாக்க வேண்டும்.

தண்ணீர் வெது வெதுப்பான பதம் வந்ததும் அடுப்பை அணைத்துவிட வேண்டும்.இந்த நீரை கொண்டு நகங்களை கழுவ வேண்டும்.

அதன் பிறகு தயாரித்து வைத்துள்ள உப்பு மஞ்சள் பேஸ்டை நகங்கள் மீது தடவி சிறிது நேரம் காய வைக்க வேண்டும்.பேஸ்ட் நன்றாக காய்ந்த பின்னர் வெது வெதுப்பான தண்ணீர் கொண்டு நகத்தை சுத்தம் செய்ய வேண்டும்.இப்படி செய்து வந்தால் ,நகசொத்தை,நகசுத்தி பாதிப்பு சில தினங்களில் குணமாகும்.

தேவையான பொருட்கள்:-

1)மருதாணி இலை – ஒரு கப்
2)மஞ்சள் தூள் – கால் தேக்கரண்டி
3)வேப்பிலை – இரண்டு கொத்து

செய்முறை விளக்கம்:-

ஒரு கப் மருதாணி இலை மற்றும் இரண்டு கொத்து வேப்பிலையை மிக்சர் ஜாரில் போட்டு தண்ணீர் ஊற்றி பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு இந்த பேஸ்ட்டில் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்ய வேண்டும்.இதை நகங்களின் மீது பூசினால் சொத்தையாகாமல் இருக்கும்.

தேவையான பொருட்கள்:-

1)பூண்டு பல் – நான்கு
2)வினிகர் – ஒரு தேக்கரண்டி
3)சோடா உப்பு – சிறிதளவு

செய்முறை விளக்கம்:-

முதலில் நான்கு பல் வெள்ளைப்பூண்டை தோல் நீக்கி கொள்ள வேண்டும்.இதை உரலில் போட்டு பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

அடுத்து இதில் ஒரு தேக்கரண்டி வினிகர் மற்றும் சிறிதளவு சோடா உப்பு சேர்த்து பேஸ்ட் பதத்திற்கு கலந்து நக சொத்தை மீது அப்ளை செய்தால் அவை சீக்கிரம் குணமாகும்.