இந்திய சினிமா துறையை பொறுத்தவரை இசையில் சாதித்தவர்கள் பலர் இருக்கலாம் ஆனால் இவர் என்றாலே இசை தன்னால் நம் மனதில் வந்து தாண்டவம் ஆடும் என்றால் ஒரு சிலரை குறிப்பிட்டு கூற முடியும். அப்படித்தான் பிரபல பாடகி ஆகவும் ரசிகர்களின் பட்டாலத்தை கொண்டவராகவும் இருக்கக்கூடிய பாடகி பி சுசிலா அவர்கள் செய்திருக்கக் கூடிய ஒரு செயல் தற்பொழுது வேகமாக பரவி வருகிறது.
எப்பொழுதுமே ஒரு இசை அமைப்பாளர் என்ன சொல்கிறாரோ அதைக் கேட்டு அப்படியே செய்யக்கூடியவராகத்தான் பி சுசிலா அவர்கள் தன்னுடைய சினிமா வாழ்க்கையில் இருந்து வந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்கக்கூடிய சூழ்நிலையில் எம்எஸ்வி அவரை ஒரு பாடலை ரகசியமாக பாடச் சொல்ல மிகவும் ரகசியமாக பி சுசிலா அவர்கள் அந்த பாடலை பாடியிருக்கிறார்.
1963 ஆம் ஆண்டு வெளியான பெரிய இடத்துப் பெண் நடிகர் எம் ஜி ஆர் நடிப்பால் டி ஆர் ராமண்ணா இயக்கத்தில் வெளியானது. இந்த திரைப்படத்தில் நாயகியாக சரோஜாதேவி அவர்களும் எம் ஆர் ராதா அசோகன் நாகேஷ் டி ஆர் ராஜகுமாரி போன்றோரும் நடித்துள்ளனர். இத்திரைப்படத்திற்கு எம் எஸ் விஸ்வநாதன் ராமமூர்த்தி ஆகியோர் இணைந்து இசையமைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தில் காண பாடல்கள் ரெக்கார்ட் செய்யும் பொழுது தான் ரகசியம் பரம ரகசியம் என்ற பாடலை எம்.எஸ். விஸ்வநாதன் அவர்கள் பி சுசிலா அவர்களிடம் ரகசியமாக பாட வேண்டும் என தெரிவித்திருக்கிறார். அதைக் கேட்ட பி சுசிலா அவர்களும் ரெக்கார்டிங் ரூமிற்கு சென்று அங்கிருந்த கோரஸ் பெண்களான 2 பேருக்கு கூட அந்த பாடல் கேட்காத அளவுக்கு மிகவும் ரகசியமாக பாடி இருக்கிறார். இதை பார்த்த எம் எஸ் விஸ்வநாதன் அவர்கள் இது யாருக்குமே கேட்கவில்லை கொஞ்சம் சத்தமாக பாடுங்கள் என தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து அவர் கேட்டது போலவே அந்த பாடலை பாடி முடித்து கொடுத்திருக்கிறார் பி சுசிலா.