இயக்குனர் ஸ்டான்லி காலமானார்!! கண்ணீரில் திரைத் துறையினர்!!

0
4
Director Stanley passes away!! Film industry in tears!!
OLYMPUS DIGITAL CAMERA Director Stanley passes away!! Film industry in tears!!

திரைப்பட இயக்குனராகவும் எழுத்தாளராகவும் நடிகராகவும் தமிழ் திரையுலகில் வலம் வந்தவர் இயக்குனர் ஸ்டான்லி. இவர் இயக்கக்கூடிய படங்கள் சமூக உணர்வை விழிப்புணர்வு படைப்புகளாகவும் குழந்தைகள் மற்றும் பின்தங்கி சமூகங்களை மையமாகக் கொண்டு உருவாக்கப்படும் திரைப்படங்களாகவும் அமைவது சிறப்பு அம்சம் பெற்றவர்.

கேரள மாநிலத்தில் 1967ஆம் ஆண்டு டிசம்பர் 14ஆம் நாள் பிறந்த இவர் கோயம்புத்தூர் அரசு கலைக்கல்லூரியில் தாவரவியல் பட்டப்படிப்பு முடித்திருக்கிறார். சினிமா மீது கொண்ட பற்றின் காரணமாக 12 ஆண்டுகள் இயக்குனர் மகேந்திரன் மற்றும் சசி ஆகியோரின் உதவியாளராக பணியாற்றி அதன் பின் தன்னுடைய இயக்குனர் பயணத்தை துவங்கி குறிப்பிடத்தக்க சில வெற்றி படங்களையும் கொடுத்திருக்கிறார். அதன்படி ஏப்ரல் மாதத்தில், புதுக்கோட்டையில் இருந்து சரவணன், மெர்குரி பூக்கள், கிழக்கு கடற்கரை சாலை போன்ற பல படங்களை இயக்கியுள்ளார். அதன்பின் சில நிதி பிரச்சனைகள் காரணமாக படங்களை இயக்குவதில் இருந்து ஓய்வெடுத்த இவர் நடிகராக களம் இறங்கியது குறிப்பிடத்தக்கது.

தமிழ் திரையுலகில் நடிகர் தனுஷ் பிரசாந்த் சினேகா போன்ற பலரை அறிமுகம் செய்த பெருமை இவரையே சாரும். இப்படிப்பட்ட இயக்குனராகவும் நடிகராகவும் சிறந்த எழுத்தாளராகவும் விளங்கிய இயக்குனர் எஸ் எஸ் ஸ்டான்லி அவர்கள் ஏப்ரல் 15 2025 ஆம் ஆண்டான இன்று அதிகாலை சென்னை நகரில் தன்னுடைய இறுதி மூச்சை விட்டிருக்கிறார். தமிழ் திரைப்படத்துறையில் தன்னுடைய தனித்துவமான பங்களிப்பால் அனைவருடைய மனதிலும் நீங்கா இடம் பிடித்திருக்கக் கூடிய ஸ்டான்லி இறைவனடி சேர்ந்திருப்பது திரைத்துறையினரை சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது.

Previous articleரகசியமா பாட சொன்னா.. இப்படியா பண்ணுவீங்க!! MSV பேச்சை தட்டாமல் செய்த பிரபல பாடகி!!
Next articleசமையல் உதவியாளர் பணிக்கு ஏப்ரல் 29 தான் கடைசி தேதி!! உடனே விண்ணப்பிக்க இதை செய்யுங்கள்!!