நம் முன்னோர்கள் காலத்தில் இருந்து கை,கால் விரல்களை சிவக்க வைக்க மருதாணி போன்ற இயற்கை பொருட்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது.மருதாணி இலைகளை பறித்து புளி அல்லது எலுமிச்சை கலந்து அரைத்து கை,கால்களுக்கு வைத்தால் செக்க சிவப்பாக மாறும்.
சிலர் மருதாணியில் சர்க்கரை தண்ணீர் சேர்த்து சிவக்க வைக்கின்றனர்.மருதாணி வெறும் அழகிற்கு மட்டும் என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கின்றனர்.மருதாணி ஓர் அபூர்வ மூலிகையாகும்.மருதாணி செடி கிராம புறங்களில் அதிகமாக வளர்கிறது.
மருதாணி இலை மட்டுமின்றி அதன் பூவிலும் ஏகப்பட்ட மருத்துவ குணங்கள் நிறைந்திருக்கிறது.மருதாணி இலையின் மருத்துவ பலன்கள் குறித்து அறிவோம்.தீக்காய புண்கள் மற்றும் தழும்புகள் மறைய மருதாணி இலையை பயன்படுத்தலாம்.
மருதாணி இலையை அரைத்து காயங்கள் மீது பூசினால் அவை சீக்கிரம் குணமாகும்.மருதாணி இலையை மைய்ய அரைத்து நெற்றியில் பூசினால் தலைவலி நீங்கும்.இளநரையை சரி செய்வதில் மருதாணியின் பங்கு இன்றியமையாதது.மருதாணி இலையை பொடித்து அவுரி பவுடரில் கலந்து தலைக்கு பயன்படுத்தி குளித்தால் வெள்ளை முடி கருமையாக மாறும்.
தேங்காய் எண்ணையில் மருதாணி இலையை போட்டு காய்ச்சி தலைக்கு பயன்படுத்தி வந்தால் முடி உதிர்வு நிற்கும்.உடலில் ஏற்படும் சூடு குறைய மருதாணி இலைகளை அரைத்து கை,கால் விரல்களில் பூசலாம்.உடலில் ஏற்படும் உஷ்ணம் குறைய மருதாணி பேஸ்டை கைகளில் வைக்கலாம்.
உடல் சூட்டால் வைற்றுப் போக்கு பிரச்சனை ஏற்படும்.இதில் இருந்து மீள மருதாணி இலையை அரைத்து சாறு எடுத்து வயிற்றுப் பகுதியில் வைக்கலாம்.சருமம் சம்மந்தபட்ட பிரச்சனைகள் குணமாக மருதாணி சாறை தேங்காய் எண்ணையில் கலந்து பயன்படுத்தலாம்.
மருதாணி எண்ணையை தலைக்கு தடவினால் சூடு குறையும்.தூக்கமின்மை பிரச்சனை இருப்பவர்கள் மருதாணி எண்ணையை தலைக்கு அப்ளை செய்யலாம்.மருதாணி இலையை தண்ணீரில் கொதிக்க வைத்து வடித்து அருந்தினால் கல்லீரலில் உள்ள கழிவுகள் நீங்கும்.இரத்த அழுத்தம் இதயப் பிரச்சனை நீங்க மருதாணி இலை நீர் பருகலாம்.
உடலில் வீக்கம் மற்றும் வலி உள்ள இடத்தில் மருதாணி எண்ணெய் தடவி மசாஜ் செய்தால் நல்ல நிவாரணம் கிடைக்கும்.மூட்டு பகுதியில் மருதாணி எண்ணையை தடவினால் வலி நீங்கும்.