முன்பெல்லாம் மழை மற்றும் குளிர் காலத்தில்தான் சளி தொந்தரவு அதிகமாக இருக்கும்.ஆனால் தற்பொழுது கொளுத்தி எடுக்கும் கோடையிலும் மூக்கில் சளி ஒழுகுகிறது.மாறி வரும் பருவநிலை மற்றும் நம் வாழ்க்கைமுறை மாற்றத்தால்தான் வெயில் காலத்திலும் சளி வருகிறது.
இந்த பிரச்சனை குழந்தைகளுக்கு மட்டுமின்றி பெரியவர்களுக்கும் இருக்கின்றது.கோடை காலத்தில் அனுபவிக்கும் இந்த சளி தொந்தரவை செலவின்றி எளிமையாக குணப்படுத்திக் கொள்வது குறித்த வழிமுறை இதோ.
சளியை கரைக்கும் கசாயம் செய்முறை:
1)மஞ்சள் தூள்
2)வேப்பிலை பொடி
3)துளசி இலைகள்
4)மிளகு
நான்கு ஐந்து கருப்பு மிளகை உரலில் போட்டு கொரகொரப்பாக தட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.பின்னர் அடுப்பில் பாத்திரம் வைத்து 150 மில்லி தண்ணீர் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.
அதன் பிறகு ஒரு தேக்கரண்டி வேப்பிலை பொடியை அந்த தண்ணீரில் சேர்க்க வேண்டும்.அடுத்ததாக இரண்டு தேக்கரண்டி துளசிகள் மற்றும் தட்டி வைத்துள்ள மிளகை போட்டு குறைந்த தீயில் கொதிக்க வைக்க வேண்டும்.பிறகு இறக்கும் சமயத்தில் சிறிது மஞ்சள் தூள் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
150 மில்லி தண்ணீர் 100 மில்லியாக குறைந்து வரும் வரை கொதிக்கவிட்டு அடுப்பை அணைக்க வேண்டும்.இந்த பானத்தை ஆறவைத்து சிறிது தேன் கலந்து குடித்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.சளி,இருமல்,காய்ச்சல் போன்ற பாதிப்புகள் வராமல் இருக்கும்.
குழந்தைகளுக்கு 10 மில்லி அளவு மூன்றுவேளைக்கு கொடுத்தால் இரண்டு நாட்களில் மார்பு சளி நீங்கிவிடும்.இந்த கஷாயத்தில் கற்பூரவல்லி,வெற்றிலை,தூதுவளை போன்றவற்றை சேர்த்துக் கொள்ளலாம்.
காலையில் வெறும் வயிற்று வேப்பிலை பானம்,துளசி பானம்,மஞ்சள் பானம் போன்றவற்றை குடித்தால் சளி பிரச்சனை சரியாகி உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.