இதை கொதிக்க வைத்து குடித்தால் நிமிடத்தில் மலக் கழிவுகள் வெளியேறி விடும்!!

Photo of author

By Divya

இதை கொதிக்க வைத்து குடித்தால் நிமிடத்தில் மலக் கழிவுகள் வெளியேறி விடும்!!

உடலில் உள்ள கழிவுகளை முழுமையாக வெளியேற்றினால் மட்டுமே உடல் ஆரோக்கியமாக செயல்படும்.மலம்,சிறுநீர் இந்த இரண்டில் எது முறையாக வெளியேறாமல் இருந்தாலும் அவை தீராத தொல்லையை தான் கொடுக்கும்.

உடலில் கழிவுகள் அதிகளவு சேர்ந்தால் அவை ஆரோக்கிய குறைபாட்டை உண்டாக்குகிறது.இந்த கழிவுகளை எந்த ஒரு சிரமமும் இன்றி வெளியேற்ற ஆயுர்வேத மூலிகைகளை பயன்படுத்தவும்.

தேவையான பொருட்கள்:-

1)கடுக்காய்
2)ஓமம்

செய்முறை:-

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி சூடாக்கவும்.பிறகு அதில் ஒரு தேக்கரண்டி ஓமத்தை போட்டு கொதிக்க விடவும்.

பின்னர் ஒரு கடுக்காயை இடித்து அதில் சேர்க்கவும்.5 நிமிடங்களுக்கு மிதமான தீயில் கொதிக்க விட்டு அடுப்பை அணைக்கவும்.

இந்த நீரை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி காலை நேரத்தில் குடித்து வந்தால் வயிற்றில் தேங்கி கிடந்த கழிவுகள் அனைத்தும் வெளியேறி விடும்.

தேவையான பொருட்கள்:-

1)துத்தி இலை பொடி
2)கடுக்காய் பொடி

செய்முறை:-

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடாக்கவும்.பிறகு அதில் ஒரு தேக்கரண்டி துத்தி இலை பொடி சேர்க்கவும்.

துத்தி இலை பொடி இல்லாதவர்கள் ஒரு பச்சை துத்தி இலையை பொடியாக நறுக்கி சேர்க்கலாம்.பின்னர் ஒரு தேக்கரண்டி கடுக்காய் பொடி சேர்த்து கொதிக்க விட்டு அடுப்பை அணைக்கவும்.

ஒரு கிளாஸிற்கு வடிகட்டி காலை நேரத்தில் குடித்து வந்தால் வயிற்றில் தேங்கி கிடந்த கழிவுகள் அனைத்தும் வெளியேறி விடும்.

தேவையான பொருட்கள்:-

1)தண்ணீர்
2)லெமன் சாறு

செய்முறை:-

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடாக்கவும்.பிறகு இதை ஒரு கிளாஸிற்கு ஊற்றி பாதி எலுமிச்சம் பழத்தின் சாற்றை பிழிந்து விடவும்.

இந்த நீரை காலையில் வெறும் வயிற்றில் குடித்தால் எப்பேர்ப்பட்ட மலச்சிக்கலுக்கும் எளிதில் தீர்வு கிடைத்து விடும்.