தற்பொழுது உங்களுக்கு சளி பிடித்து வாட்டி எடுக்கிறதா.அதிகப்படியான சளியால் மூச்சிவிட முடியாமல் கஷ்டப்பட்டு கொண்டிருக்கிறீர்களா.எப்பேர்ப்பட்ட சளி பாதிப்பும் சில மணி நேரத்தில் கட்டுப்பட சித்தரத்தை எனும் மூலிகையை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து பருகலாம்.
நம் முன்னோர்கள் காலத்தில் சளியை குணமாக்க இந்த சித்தரத்தையை தான் மருந்தாக பயன்படுத்தி வந்தனர்.இந்த சித்தரத்தை பார்ப்பதற்கு மஞ்சள் கிழங்கு தோற்றத்தில் இருக்கும்.சித்தரத்தை கொதிக்க வைத்த நீரை பருகி வந்தால் உடலில் புற்றுநோய் செல்கள் வளர்வது தடுக்கப்படும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
தேவையான பொருட்கள்:-
1)சித்தரத்தை – ஒரு துண்டு
2)தண்ணீர் – ஒரு கிளாஸ்
செய்முறை விளக்கம்:-
**சித்தரத்தை நாட்டு மருந்து கடையில் கிடைக்க கூடிய ஒரு மூலிகை ஆகும்.இதை தேவையான அளவு வாங்கி வைத்துக் கொள்ளவும்.
**பிறகு அடுப்பில் பாத்திரம் ஒன்றை வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி மிதமான தீயில் சூடுபடுத்தவும்.
**தண்ணீர் சிறிது சூடாகி வந்ததும் ஒரு துண்டு சித்தரத்தையை அதில் போட்டு ஒரு நிமிடத்திற்கு கொதிக்க வைக்கவும்.
**பிறகு அடுப்பை அணைத்துவிட்டு சித்தரத்தை தண்ணீரை நன்கு ஆற வைக்க வேண்டும்.பின்னர் இந்த சித்தரத்தை நீரை வேறொரு கிளாஸிற்கு வடிகட்டி பருக வேண்டும்.
**மார்பு,நுரையீரலில் படிந்துள்ள மஞ்சள் நிற கெட்டி சளியை இந்த சித்தரத்தை நீர் கரைத்து வெளியேற்றிவிடும்.மாத்திரை,டானிக் போன்றவற்றிற்கு பதில் இந்த சித்தரத்தை பானத்தை பருகினால் தீராத சளி பாதிப்பு முழுமையாக குணமாகும்.
**குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இந்த பானத்தை தாராளமாக எடுத்துக் கொள்ளலாம்.சித்தரத்தை மூலிகை குணம் கொண்ட பொருள் என்பதால் எந்தொரு பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாது.