தேசிய கல்விக் கொள்கை மற்றும் மும்மொழிக் கொள்கையை எதிர்த்து தமிழகத்தில் போராட்டங்கள் வெடித்துக் கொண்டிருக்கும் நிலையில் மத்திய அரசு மற்றும் மாநில அரசுக்கு இடையே போரும் நடைபெற்று வருகிறது.
இந்தப் போரில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான அவர்கள் முதலில் தமிழக முதலமைச்சர் இந்த தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொண்டதாகவும் தற்பொழுது மறுப்பது போன்று நாடகம் மேற்கொள்வதாகவும் இந்த தேசிய கல்விக் கொள்கை மற்றும் மும்னொழி கொள்கையை வைத்து அரசியல் செய்வதாகவும் குற்றம் சாட்டியிருக்கிறார். மேலும் இவ்வாறு செய்வதால் தமிழகத்திற்கு 5000 கோடி இழப்பீடு என தெரிவித்திருக்கிறார்.
இவ்வாறு மும்மொழிக் கொள்கையை ஏற்றுக் கொண்டால் மட்டுமே நிதி எனக் கூறும் மத்திய அரசினுடைய செயல் கண்டிக்கத்தக்கது என்றும் எப்பொழுதுமே தமிழகத்தில் இரு மொழிக் கொள்கை மட்டும்தான் எனக் கூறிய முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள், கல்வி நிதியை நீங்கள் தர முடியாது எனக்கு கூறுவது போல தமிழகத்திலிருந்து வரக்கூடிய வரிகளை நாங்கள் நிறுத்தி விட்டால் என்ன செய்வீர்கள் என கேள்வி எழுப்பியதோடு நாங்கள் அவ்வாறு செய்ய மாட்டோம் ஏனென்றால் இது கூட்டாச்சி என்றும் பதிவு செய்திருக்கிறார்.
முதல்வரின் உடைய இந்த பதிலுக்கு தமிழ்நாடு பாஜக பொருளாளர் ஆன எஸ்.ஏ சேகர் அவர்கள், ” வரி செலுத்த முடியாது என்றால் உங்கள் மீது 365 பாயும் ” என மிரட்டி இருக்கிறார். அதாவது ஆட்சி கலைப்பானது செய்யப்படும் என மிரட்டி இருப்பது அரசியல் விமர்சகர்களின் விமர்சனங்களை பெற்று வருவதாக அமைந்திருக்கிறது.
இதற்குக் காரணம், ஏற்கனவே இரண்டு முறை ஆட்சி கலைப்பு செய்யப்பட்டு காங்கிரஸ் கட்சியால் வீட்டிற்கு அனுப்பப்பட்டவர்கள் தாங்கள் என்பதை அண்ணன் மறந்துவிட்டார் போல என அரசியல் விமர்சகர்கள் சாடுகின்றனர்.