வாயில் போட்ட உணவை உடனே விழுங்காமல் 2 நிமிடங்கள் மென்று சாப்பிட்டால் நோயின்றி வாழலாம்!!

Photo of author

By Divya

வாயில் போட்ட உணவை உடனே விழுங்காமல் 2 நிமிடங்கள் மென்று சாப்பிட்டால் நோயின்றி வாழலாம்!!

மனித உடல் சீராக இயங்க உணவு இன்றையமையாத ஒன்று.அதேபோல் உண்கின்ற உணவு ஆரோக்கியமானதாகவும்,எளிதில் செரிக்க கூடியதாகவும் இருக்க வேண்டும்.ஆனால் இன்றைய தலைமுறையினர் உண்வது உணவு அல்லது ஸ்லோ பாய்சன்.

உணவை உரிய நேரத்தில் உட்கொள்ளாமல் நேரம் கடந்து உட்கொள்கின்றனர்.இரவு 12,1 மணிக்கு கூட செரிக்காத அசைவ உணவுகளை உண்டு வருகின்றனர்.சத்தான காய்கறி,பழங்களை ஒதுக்கிவிட்டு பரோட்டா,சவர்மா,சிக்கன் ரைஸ்,பிரியாணி,சிக்கன் நூடுல்ஸ்,அசைவ சில்லி வகைகளை உண்டு வருவதால் குடல் ஆரோக்கியம் மெல்ல மெல்ல குறைந்து வருகிறது.

முதலில் உண்கின்ற உணவு ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும்.அடுத்த உண்கின்ற உணவை அப்படியே விழுங்காமல் மென்று சாப்பிட வேண்டும்.ஒவ்வொரு முறை உணவை வாயில் போட்டாலும் இரண்டு நிமிடங்கள் நன்கு மென்று சாப்பிட வேண்டும் என்று நம் முன்னோர்கள் நமக்கு சொல்லிவிட்டு சென்றிருக்கிறார்கள்.

உணவை நன்கு மென்று சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்:

1)உணவை நீண்ட நேரம் மென்று சாப்பிடுவதால் செரிமான மண்டலத்தின் ஆரோக்கியம் மேம்படும்.

2)உணவை நன்றாக மென்று சாப்பிடுவதால் உடல் எடை குறையும்.

3)உண்கின்ற உணவை நன்கு மென்று சாப்பிடுவதால் உங்கள் மூளை நீங்கள் அதிகம் சாப்பிட்ட உணர்வை ஏற்படுத்தும்.இதனால் உணவில் கட்டுப்பாடு ஏற்படும்.

4)உணவு சாப்பிட்டு முடிக்க நீண்ட நேரம் எடுத்துக் கொள்வதால் வயிறு நிறைந்த உணர்வு ஏற்படும்.அதேபோல் உணவில் அதிக கவனம் செலுத்த முடியும்.

5)ஒரு சிலர் உணவை வேகவேகமாக உண்பார்கள்.இதனால் சில சமயம் தொண்டையில் சிக்கி கொள்ளும் ஆபத்தான நிலை ஏற்படும்.இதனை தவிர்க்க உணவை நன்கு மென்று சாப்பிட வேண்டும்.

6)உணவை மென்று சாப்பிடுவதால் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் எளிதில் கிடைத்து விடுகிறது.