இப்படி இயற்கை முறையில் நுரையீரலை சுத்தம் செய்தால்.. இனி சாகும் வரை மூச்சு சம்மந்தமான பிரச்சனையே வராது!!

Photo of author

By Divya

உலகில் உள்ள அனைத்து உயிர்களும் வாழ சுவாசம் அவசியமான ஒன்றாகும்.நுரையீரல் இன்றி நம்மால் சுவாசிக்க முடியாது.நாம் நாசி வழியாக உள் இழுக்கும் ஆக்சிஜனை வடிகட்டி மற்ற உறுப்புகளுக்கு அனுப்பும் வேலையை நுரையீரல் செய்கிறது.

ஆனால் தற்பொழுது காற்று மாசு அதிகரித்து வருவதால் நுரையீரல் தொடர்பான பாதிப்புகள் அதிகரித்த வண்ணம் உள்ளது.காற்றில் உள்ள அழுக்குகள் மற்றும் துகள்கள்,நச்சுப் புகைகள் நுரையீரலில் குவிந்து அதன் செயல்பாட்டை பாதிக்கச் செய்கிறது.

தேவையான பொருட்கள்

1)கருப்பு மிளகு
2)கருந்துளசி
3)அதிமதுரம்
4)இலவங்கம்
5)ஆடாதொடை
6)ஏலக்காய்
7)தூதுவளை இலை
8)இந்துப்பு

செய்முறை

ஒரு கப் கருந்துளசி,இரண்டு ஆடாதோடை இலை,10 தூதுவளை இலையை வெயிலில் நன்கு உலர்த்தி பொடியாக்கி கொள்ளவும்.

அதன் பிறகு அதிமதுரப் பொடி,இலவங்கப் பொடி ஆகியவற்றை நாட்டு மருந்து கடையில் 50 கிராம் அளவிற்கு வாங்கிக் கொள்ளவும்.

பின்னர் 10 ஏலக்காயை மிக்ஸி ஜாரில் போட்டு பொடித்தெடுத்துக் கொள்ளவும்.அதேபோல் 20 கிராம் இந்துப்பை மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து பொடி செய்து வைத்துக் கொள்ளவும்.

இப்பொழுது ஒரு கிண்ணத்தில் 10 கிராம் கருந்துளசி பொடி,10 கிராம் ஆடாதோடை இலை பொடி,10 கிராம் தூதுவளை இலை பொடி சேர்த்துக் கொள்ளவும்.

பிறகு 10 கிராம் இலவங்கப் பொடி,10 கிராம் அதிமதுரப் பொடியை அதில் மிக்ஸ் செய்யவும்.இறுதியாக 10 கிராம் இந்துப்பு மற்றும் 5 கிராம் ஏலக்காய் பொடியை போட்டு தேவையான அளவு தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் நுரையீரலில் தேங்கிய அழுக்குகள் முழுமையாக வெளியேறிவிடும்.சளி,இருமல் பிரச்சனை இருப்பவர்களுக்கு இந்த மூலிகை பொடியை வெந்நீரில் கலந்து தினமும் மூன்று வேளை கொடுக்கலாம்.