இன்று பெரும்பாலானோர் உடல் பருமனால் கஷ்டப்பட்டு வருகின்றனர்.மோசமான உணவுமுறை பழக்கம்,சோம்பேறி வாழக்கை முறை போன்ற காரணங்களால் உடல் எடை கூடி இதய நோய்,இரத்த அழுத்தம்,சர்க்கரை உள்ளிட்ட பல்வேறு நோய் உருவாக வழிவகுக்கிறது.உடல் எடை கூட முக்கிய காரணம் நாம் உபயோகிக்கும் சமையல் எண்ணெய்.இன்று பாமாயில்,கலப்பட எண்ணெய்களின் பயன்பாடு அதிகமாக இருக்கின்றது.
இந்த எண்ணெய்களில் செய்யப்பட்ட உணவுகளை சாப்பிட்டால் உடல் ஆரோக்கியம் முழுமையாக கெட்டுவிடும்.எனவே உடலில் கொழுப்பு படியாமல் இருக்க கீழே கொடுக்கப்பட்டிருக்கும் எண்ணெய்களை சமையலுக்கு பயன்படுத்துவது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.உடலில் கொலஸ்ட்ரால் பிரச்சனை இருப்பவர்கள் நெய்,வெண்ணை,கொழுப்புச்சத்து நிறைந்த உணவுகளை தவிர்க்க வேண்டும்.
1)ஆலிவ் எண்ணெய்
உடலில் இருக்கின்ற கொலஸ்ட்ரால் அளவு குறைய ஆலிவ் எண்ணையை சமையலுக்கு பயன்படுத்தி வரலாம்.இந்த எண்ணெய் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.
2)எள் எண்ணெய்
இதில் புரதம்,வைட்டமின்கள்,ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்திருக்கிறது.உடலில் இருக்கின்ற கொழுப்பை கரைத்து வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க எள் எண்ணையை சமையலுக்கு பயன்படுத்தி வரலாம்.
3)கடுகு எண்ணெய்
சமையலுக்கு கடுகு எண்ணெய் பயன்படுத்தி வந்தால் உடலில் கொழுப்பு சேர்வது தடுக்கப்படும்.
4)தேங்காய் எண்ணெய்
இதில் இருக்கின்ற ஊட்டச்சத்துக்கள் உடலில் சேரும் கொழுப்பை கரைக்க உதவுகிறது.தேங்காய் எண்ணெய் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.
5)சூரிய காந்தி எண்ணெய்
இந்த எண்ணெயில் பாலிஅன்சாச்சுரேட்டட் மற்றும் மோனோசாச்சுரேட்டட் கொழுப்புகள் நிறைந்திருக்கிறது.இதனால் சூரிய காந்தி எண்ணெயில் சமைத்த உணவுகளை சாப்பிட்டு வந்தால் உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் தேங்குவது கட்டுப்படும்.