இந்த செடியின் வேரை இடித்து 50 மில்லி அளவு சாறு எடுத்து அருந்தினால் வயிறு தொடர்பான அனைத்து பிரச்னைகளும் நீங்கும்!!

Photo of author

By Divya

இந்த செடியின் வேரை இடித்து 50 மில்லி அளவு சாறு எடுத்து அருந்தினால் வயிறு தொடர்பான அனைத்து பிரச்னைகளும் நீங்கும்!!

நாம் உண்ணும் உணவு ஆரோக்கியமானதா இருக்க வேண்டும்.உடல் சீராக இயங்க வேண்டும் என்றால் எளிதில் செரிக்க கூடிய ஊட்டச்சத்து மிக்க உணவுகளை உண்ண வேண்டும்.ஆனால் இன்று அனைவரும் உணவில் ருசி இருக்கிறதா என்பதை மட்டுமே பார்கின்றோம்.அதில் ஊட்டச்சத்துக்கள் இருக்கிறதா என்பதை கவனிப்பதில்லை.

முன்பெல்லாம் உணவு தான் மருந்து என்ற கருத்து சொல்லப்பட்டு வந்தது.ஆனால் இன்று உண்ணும் உணவுகள் அனைத்தும் ஸ்லோ பாய்சன்களாக மாறி மாத்திரை,மருந்து தான் உணவு என்ற அவல நிலை உருவாகி விட்டது.

நம் உடலில் வயிற்று பகுதி சீராக இயங்குவது அவசியம் ஆகும்.செரிமான பிரச்சனை,அல்சர்,வயிற்றுப் புண்,மலச்சிக்கல்,வாயுத் தொல்லை உள்ளிட்ட பாதிப்புகள் இருந்தால் அவை உடலின் ஆரோக்கியத்தை மெல்ல மெல்ல இழக்கச் செய்து விடும்.

வயிறு தொடர்பான அனைத்து பாதிப்புகளும் நீங்க இந்த இயற்கை வைத்தியத்தை பின்பற்றுங்கள்.

தேவையான பொருட்கள்:-

1)குப்பைமேனி வேர்
2)தூயத் தேன்

செய்முறை:-

ஒரு கைப்பிடி அளவு குப்பைமேனி வேரை எடுத்து நீர் கொண்டு அலசி சுத்தம் செய்து கொள்ளவும்.

இந்த வேரை அம்மியில் போட்டு சிறிது தண்ணீர் தெளித்து பேஸ்ட் போல் அரைக்கவும்.

இந்த பேஸ்டை ஒரு கிண்ணத்திற்கு வடிகட்டி சாறு பிழிந்து எடுத்துக் கொள்ளவும்.பிறகு அதில் ஒரு தேக்கரண்டி தூயத் தேன் சேர்த்து நன்கு கலந்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும்.

இவ்வாறு தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் வயிற்று உப்பசம் ஆகுதல்,மலச்சிக்கல்,வாயுத் தொல்லை,செரிமானக் கோளாறு உள்ளிட்ட வயிறு தொடர்பான அனைத்து பிரச்சனைகளும் சரியாகும்.