இப்படி 2 நிமிடம் அழுதால் உங்களுக்கு வாழ்நாள் முழுவதும் டிப்ரஷனே ஏற்படாது!!

Photo of author

By Divya

இப்படி 2 நிமிடம் அழுதால் உங்களுக்கு வாழ்நாள் முழுவதும் டிப்ரஷனே ஏற்படாது!!

Divya

If you cry for 2 minutes like this, you will not get depression for life!!

இப்படி 2 நிமிடம் அழுதால் உங்களுக்கு வாழ்நாள் முழுவதும் டிப்ரஷனே ஏற்படாது!!

உலகில் வாழும் அனைத்து உயிர்களுக்கும் அன்பு, கோபம், ஏமாற்றம், தோல்வி, மகிழ்ச்சி பொதுவானவை.இதுபோன்ற ஏதேனும் ஒரு நிகழ்வு நடந்தால் அதை கண்ணீர் வழியாக தான் அனைவரும் வெளிப்படுத்துவார்கள்.சிலர் தங்கள் உணர்வை கட்டுக்குள் வைத்துக் கொள்வார்கள்.சிலரால் எந்த ஒரு நிகழ்வையும் எளிதில் ஏற்றுக் கொள்ள முடியாது.அதை எளிதில் கடந்து செல்ல முடியாது.இவர்களை அதிக எமோஷ்னல் நபர்கள் என்பார்கள்.

சிலர் எதற்கெடுத்தாலும் அழுவார்கள்.அவர்களை அழுமூஞ்சி என்று நீங்களே கிண்டல் செய்திருப்பீர்கள்.அழுவது கோழைத்தனம் என்று கருதப்பட்டாலும் அவை மன வலிக்கு ஒரு மருந்தாக செயல்படுகிறது என்பது மறுக்க முடியாத உண்மை.

தினமும் குறைந்தது 2 நிமிடங்கள் அழுதால் மன அழுத்தம் நீங்கும் என்று ஆய்வு சொல்கிறது.அழுவதால் தற்கொலை எண்ணம் நீங்குகிறது.கண்ணீர் விட்டு அழும் பொழுது கண்களின் வறட்சி நீங்கி கண்களுக்கு தேவையான ஈரம் கிடைக்கிறது.

சிலர் அழும் பொழுது மூக்கில் இருந்து நீர் வடியும்.இதனால் மூக்கு ஓட்டைக்குள் தேங்கி கிடந்த அழுக்கு,தூசிகள் அடித்துக் கொண்டு வெளியேறும்.அழும் பொழுது நம் மனதில் இருக்கின்ற வலிகள் நீங்கி ஒரு தெளிவு பிறக்கிறது.இதனால் தான் அழுகை ஓர் அருமருந்து என்று சொல்லப்படுகிறது.எனவே தாங்கிக் கொள்ள முடியாத நிகழ்வு நடந்தால் அதை கட்டுப்படுத்தாமல் அழுது விடுங்கள்.இல்லையேல் மன அழுத்ததிற்கு ஆளாக நேரிடும்.