Breaking News, Cinema, News, State

அதை செய்தால் உடனடியாக வாய்ப்பு கிடைக்கும்! பிரபல நடிகைக்கு ஏற்பட்ட கசப்பான சம்பவம்!!

Photo of author

By Divya

அதை செய்தால் உடனடியாக வாய்ப்பு கிடைக்கும்! பிரபல நடிகைக்கு ஏற்பட்ட கசப்பான சம்பவம்!!

சமீபகாலமாக பட வாய்ப்பிற்காக நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் நிகழ்வு அதிகரித்து வருகின்றது.இதில் சிலர் பட வாய்ப்பு கிடைத்தால் போதுமென்று இதற்கு சம்மதித்து பிறகு வாழ்க்கையை தொலைத்து விடுகின்றனர்.ஆனால் ஒரு சிலர் தங்களின் திறமைக்கு வாய்ப்பு கிடைத்தால் கிடைக்கட்டும் இல்லையென்றால் சினிமாவே வேண்டாம் என்று படுக்கை அழைப்பை நிராகரித்து விடுகின்றனர்.

இது வெள்ளித்திரையில் மட்டும் தான் நடக்கிறதா? என்றால் இல்லை.தற்பொழுது சின்னத்திரை நடிகைகளுக்கும் இந்த கொடுமைகள் நடந்து வருகின்றது.இந்நிலையில் தங்களுக்கு நடந்த கொடுமைகள் மற்றும் தாங்கள் பாலியல் ரீதியாக சந்தித்த பிரச்சனைகளை ‘மீ டூ’ அமைப்பின் மூலம் பாதிக்கப்பட்டவர்கள் அம்பலப்படுத்தி வந்தாலும் பட வாய்ப்பிற்காக படுக்கைக்கு அழைக்கும் நிகழ்வுகள் மட்டும் குறைந்தபாடு இல்லை.

இந்நிலையில் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகைகள் மற்றும் பாடகிகள் வாய்ப்பிற்காக தாங்கள் சந்தித்த ‘அட்ஜஸ்ட்மெண்ட்’ பிரச்சனைகளைப் பற்றி வெளிப்படையாக தெரிவித்து வரும் நிலையில் தற்பொழுது தமிழ்,தெலுங்கு,இந்தி உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து வரும் ‘ரெஜினா காஸண்ட்ரா’ அவர்களும் இது குறித்து பேசியிருக்கிறார்.

இவர் கடந்த 2005 ஆம் ஆண்டு வெளியான ‘கண்ட நாள் முதல்’ என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார்.இதையடுத்து பல தமிழ் படங்களில் நடித்த இவருக்கு கேடி பில்லா கில்லாடி ரங்கா,மாநகரம்,நெஞ்சம் மறப்பதில்லை போன்ற படங்கள் பெயர் சொல்லும் படியாக அமைந்தது.

இந்நிலையில் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றிற்கு அளித்த பேட்டியில் தனக்கு நடந்த
அட்ஜஸ்ட்மெண்ட் விவகாரம் குறித்து பேசியிருக்கிறார்.தான் பட வாய்ப்பின்றி தவித்தபோது சிலரிடம் நடிக்க வாய்ப்பு கேட்டேன்.அதில் ஒருவர் உடனடியாக வாய்ப்பு வேண்டுமென்றால் ‘அட்ஜஸ்ட்மெண்ட்’ செய்ய வேண்டுமென்று கூறினார்.

ஆனால் அவர் சம்பள விவகாரத்தில் தான் அட்ஜஸ்ட் செய்ய சொல்கிறார் என்று நினைத்தேன்.என் உதவியாளர் சொன்ன பிறகு தான் அந்த நபர் என்னை தவறாக அழைத்திருக்கிறார் என்பதை உணர்ந்து அதற்கு மறுப்பு தெரிவித்து விட்டேன்.இந்த நிகழ்வு நடக்கும் பொழுது தனக்கு 20 வயது தான்.அதன் பிறகு இது மாதிரியான கசப்பான தருணங்களை நான் இன்றுவரை எதிர்கொள்ளவில்லை என்று கூறினார்.

என்னது.. 27 வருடங்களாக லீவ் எடுக்காத ஊழியரா? கடமையே கண்ணென்று இருந்தவருக்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி!!

அண்ணாவின் பொன் மொழிகளை மேற்கோள் காட்டி பதிவிட்ட டிடிவி தினகரன்!! அதிமுக மாநாட்டை கூறுகிறாரோ??