வீட்டில் இவ்வாறு செய்தால் சகல ஐஸ்வர்யம் கிடைக்கும்..!

0
248
#image_title

வீட்டில் இவ்வாறு செய்தால் சகல ஐஸ்வர்யம் கிடைக்கும்..!

வீட்டில் ஐஸ்வர்யம் பெருக பரிகாரம்…

தேவைப்படும் பொருட்கள்..

மஞ்சள்
குங்குமம்
பித்தளை செம்பு
பச்சை கற்பூரம்
கிராம்பு
1 ரூபாய் நாணயம்
ஏலக்காய்
பஞ்ச கவ்ய விளக்கு
நல்லெண்ணெய்
திரி
பன்னீர்

வீட்டு நிலைவாசலை சுத்தமான தண்ணீர் கொண்டு துடைத்துக் கொள்ளவும். பிறகு நிலவசலின் இருபுறமும் ஓரத்தில் மஞ்சள் குங்குமம் வைக்கவும்.

அதேபோல் கதவு, ஜன்னல்களில் மஞ்சள் குங்கும பொட்டு வைத்துக் கொள்ளவும். அடுத்து ஒரு பித்தளை செம்பில் தண்ணீர் ஊற்றி வீட்டின் வடகிழக்கு மூலையில் வைக்கவும்.

அதில் சிறிதளவு மஞ்சள், குங்குமம், பச்சை கற்பூரம் சேர்க்கவும். தொடர்ந்து வாசனை பன்னீர் சேர்த்து 1 ரூபாய் நாணயம் 5 போட்டு பூ போட்டு வைக்கவும்.

அடுத்து ஒரு கண்ணாடி கிண்ணத்தில் 27 என்ற எண்ணிக்கையில் 1 ரூபாய் நாணயம் 2 கிராம்பு(இலவங்கம்), 3 எண்ணிக்கையில் ஏலக்காய் மற்றும் 1 துண்டு பச்சைக் கற்பூரம் போட்டு பூஜைக்கு உகந்த மலர் ஒன்றை போட்டு பூஜை அறையில் வைத்து விடவும்.

பிறகு தெய்வ சக்தியை அதிகரிக்க கூடிய பஞ்ச கவ்ய விளக்கு வாங்கி நல்லெண்ணெய் ஊற்றி திரி போட்டு தீபம் ஏற்றவும்.

இந்த விளக்கு முழுமையாக எரிந்து முடிய வேண்டும். எந்த நாளில் இந்த பரிகாரத்தை தொடங்குகிறீர்களோ அடுத்த வாரத்தில் அதே நாளில் இவ்வாறு மீண்டும் செய்ய வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வர நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும்.

Previous article“திப்பிலி + வசம்பு” போதும்.. ஆயுசுக்கும் பக்கவாதம் வராது!
Next articleஇந்த காயை இப்படி பயன்படுத்தினால் சர்க்கரை நோய் பக்கத்தில் வரவே அஞ்சும்..!