2 நிமிடம் இதை செய்தால் இடுப்பு வலிக்கு வாழ்நாள் தீர்வு கிடைக்கும்!! கூடவே இதையும் சாப்பிடுங்கள்!!

Photo of author

By Divya

2 நிமிடம் இதை செய்தால் இடுப்பு வலிக்கு வாழ்நாள் தீர்வு கிடைக்கும்!! கூடவே இதையும் சாப்பிடுங்கள்!!

Divya

இடுப்பு வலி பிரச்சனையை வயது வித்தியாசமின்றி அனைவருக்கும் சந்திக்கின்றனர்.இந்த இடுப்பு வலி மட்டும் வந்துவிட்டால் படாத பாடு பட்டுவிடுவோம்,எந்த ஒரு பணியை செய்வதிலும் சிரமம் ஏற்படும்.குனிந்தால் இடுப்பு பகுதியில் சுளீர் என்று வலி வருதல்,வேகமாக நடந்தால் இடுப்பு வலித்தல்,நீண்ட நேரம் அமர்ந்தால் இடுப்பு பகுதியில் வலித்தல் பிரச்சனையை சந்திக்க நேரிடுகிறது.

முதுமை காலத்தில் வந்த இடுப்பு வலி பிரச்சனை தற்பொழுது சிறு குழந்தைகளுக்கு கூட ஏற்படுகிறது.கால்சியம் குறைபாடு,நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்நிலை வாழ்க்கை முறை,முதுகு பகுதியில் அடிபடுதல்,பிரசவம் போன்ற காரணங்களால் இடுப்பு வலி பாதிப்பு அதிகமாக ஏற்படுகிறது.

இந்த இடுப்பு வலி குணமாக மருந்து தேவையில்லை.இதை செலவு இல்லாமல் சீக்கிரம் குணப்படுத்திவிடலாம்.அதற்கு முதலில் நீங்கள் தரையில் குப்புற படுக்க வேண்டும்.பின்னர் கீழ் முதுகு பகுதியில் கை கட்டை விரல் வைத்து அழுத்தம் கொடுக்க வேண்டும்.கிளாக் வைஸ் மற்றும் ஆன்டி கிளாக் வைஸ் என்று 10 முறை அழுத்தி தேய்த்தால் இடுப்பு வலி குணமாகும்.அதேபோல் ராகியை வைத்து இடுப்பு வலி பாதிப்பை சரி செய்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்:-

1)ராகி மாவு – ஒரு கப்
2)வெண்ணெய் – 25 மில்லி
3)கருப்பட்டி – 50 கிராம்
4)முந்திரி – 10 கிராம்
5)பாதாம் பருப்பு – 10 கிராம்

செய்முறை விளக்கம்:-

முதலில் ராகியை பவுடர் பதத்திற்கு பிரஸாக அரைத்துக் கொள்ள வேண்டும்.பிறகு அடுப்பில் வாணலி வைத்து ராகி மாவு போட்டு வாசனை வரும் வரை வறுக்க வேண்டும்.

ராகி மாவு நன்றாக வறுபட்டு வந்த பின்னர் 25 மில்லி வெண்ணெய் சேர்த்து கிளற வேண்டும.அதன் பிறகு 50 கிராம் அளவிற்கு கருப்பட்டி தூள் சேர்த்து நன்றாக கலந்து அடுப்பில் இருந்து இறக்க வேண்டும்.

அடுத்து அடுப்பில் தாளிப்பு கரண்டி வைத்து சிறிது வெண்ணெய் ஊற்றி சூடாக்க வேண்டும்.பிறகு அதில் முந்திரி பருப்பு மற்றும் பாதாம் பருப்பு போட்டு வறுக்க வேண்டும்.

இதை ராகி மாவில் போட்டு நன்றாக மிக்ஸ் செய்து உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.இந்த ராகி உருண்டையை தினமும் ஒன்று சாப்பிட்டு வந்தால் இடுப்பு எலும்பு வலிமை அதிகரிக்கும்.இடுப்பு வலி,முதுகு வலி போன்ற பிரச்சனைகளை இந்த ராகி உருண்டை சாப்பிட்டு சரி செய்து கொள்ளலாம்.