நமது உடலுக்குள் இருந்து தோல் வழியாக திரவ வடிவில் கழிவுகள் வெளியேறுகிறது.இதை வியர்வை என்று நாம் சொல்கின்றோம்.இந்த வியர்வை உடலில் இருந்து வெளியேறுவது நல்லது என்றாலும் அவை அதிகமாக வெளியேறினாலோ அல்லது துர்நாற்றத்துடன் வெளியேறினாலோ நமக்கு பிரச்சனையாகிவிடும்.
நமது உடலில் அக்குள் பகுதியில் இருந்துதான் அதிகளவு வியர்வை வெளியேறுகிறது.இதனால் அக்குளில் கடுமையான துர்நாற்றம் வீசுகிறது.இதை கட்டுப்படுத்த இரசாயனங்கள் நிறைந்த வாசனை திரவியத்தை பலரும் பயன்படுத்துகின்றனர்.ஆனால் உண்மையில் வாசனை திரவியங்கள் வியர்வை நாற்றத்தை கட்டுப்படுத்தாது.நாம் இயற்கை வழிகளை பின்பற்றினால் மட்டுமே உடலில் துர்நாற்ற வியர்வை வெளியேறாமல் இருக்கும்.
யாருக்கு ஆதிகமாக வியர்வை வெளியேறும்?
மது அருந்தும் பழக்கம் உள்ளவர்களுக்கு உடலில் துர்நாற்ற வியர்வை வெளியேறும்.அதேபோல் உடல் எடை அதிகமாக இருந்தால் அதிகமாக வியர்வை வெளியேறும்.சிவப்பு இறைச்சி உணவுகளை அதிகளவு சாப்பிட்டால் உடலில் வெளியேறும் வியர்வையில் துர்நாற்றம் வீசும்.
அதேபோல் கர்ப்பிணி பெண்கள் மற்றும் மன அழுத்தப் பிரச்சனை இருப்பவர்களுக்கு வியர்வை துர் நாற்றத்துடன் வெளியேறும்.
வியர்வை வாராமல் இருக்க வழிகள்:
1)குளிக்கும் நீரில் சிறிதளவு வினிகர் சேர்த்துக் கொண்டால் வியர்வை வெளியேறுவது கட்டுப்படும்.
2)தக்காளி பழத்தை ஜூஸாக அரைத்து குடித்து வந்தால் வியர்வை வெளியேறாமல் இருக்கும்.
3)உருளைக்கிழங்கை அரைத்து அக்குள் பகுதியில் தடவி குளித்தால் வியர்வை வெளியேறாமல் இருக்கும்.
4)குளிக்கும் நீரில் எலுமிச்சை சாறு,கல் உப்பு சேர்த்துக் கொண்டால் வியர்வை வெளியேறுவது கட்டுப்படும்.
5)தினமும் இரண்டு நேரம் குளியல் மேற்கொண்டால் வியர்வை வெளியேறாமல் இருக்கும்.தினமும் ஒரு கிளாஸ் திராட்சை ஜூஸ் செய்து பருகி வந்தால் வியர்வை வெளியேறாமல் இருக்கும்.
6)தேங்காய் எண்ணையில் ஒரு கட்டி கற்பூரம் போட்டு சூடாக்கி உடலில் அதிகமாக வியர்க்கும் இடங்களில் பூசினால் நல்ல பலன் கிடைக்கும்.