இந்த எளிய பரிகாரத்தை செய்தால் நடக்காதது என்று சொல்லும் காரியமும் நடக்கும்..!!

Photo of author

By Divya

இந்த எளிய பரிகாரத்தை செய்தால் நடக்காதது என்று சொல்லும் காரியமும் நடக்கும்..!!

நம்மில் பலருக்கு பல கனவுகள், ஆசைகள் இருக்கும். ஆனால் சில விஷயங்கள் நடக்க கூடியதாக இருக்கும். சிலது கடினமான ஆசையாக இருக்கும். இன்னும் சில ஆசைகளும், கனவுகளும் நடக்கே நடக்காது என்று பிறர் சொல்லும் அளவிற்கு இருக்கும். இது போன்ற நடக்காத விஷயம் கூட நடக்க வேண்டும் என்றால் உங்கள் வீட்டிற்கு அருகில் உள்ள பெருமாள் கோயிலுக்கு இந்த பொருளை தனமாக கொடுக்கவும். அது என்ன பொருள் என்றால் நவதானியம் தான்.

நவ தானியங்கள் எவை…

1)கோதுமை

2)நெல்

3)துவரை

4)பச்சைப் பயறு

5)கொண்டைக் கடலை

6)மொச்சை

7)எள்

8)கொள்ளு

9)உளுந்து

இந்த நவதானியத்தின் அளவு அவரவர் தகுதிக்கு ஏற்ப வாங்கிக் கொடுக்கவும். (கால் கிலோ முதல் 1 கிலோ வரை)

அப்படி ஒன்பது நவதானியங்களும் ஒரே நேரத்தில் வாங்கிக் கொடுக்க வசதி இல்லாதவர்கள் ஒவ்வொரு வாரம் ஒரு தானியம் என்ற வீதம் ஒன்பது வாரங்கள் இதை செய்து முடிக்கலாம்.

ஒவ்வொரு தானியமும் ஒவ்வொரு கிரகத்தின் அதிபதிக்கு உகந்தது என்பதால் கிரக தோஷம் கிரக தாக்கம் குறைந்து நவ கிரகங்களின் ஆசி கிடைக்க ஆரம்பிக்கும்.

தொடர் காரியங்கள் நிச்சயம் வெற்றியடையும். அதேபோல் நடக்காத காரியங்களும்’நடக்க ஆரம்பிக்கும்.