ரயில் டிக்கெட் புக் செய்வதற்கு இப்படிச் செய்தால் லோயர் பெர்த் கிடைக்குமா! இந்திய ரயில்வே வெளியிட்டுள்ள புதிய தகவல்!!
இந்திய ரயில்வே மூலம் ஒரு நாளைக்கு லட்சக்கணக்கான பயணிகள் பயணம் செய்கின்றனர். பிற போக்குவரத்து முறைகளைக் காட்டிலும் ரயில் பயணத்தையே மக்கள் பெரிதும் விரும்புகின்றனர். காரணம், மற்ற போக்குவரத்து முறைகளை விட ரயில்வே கட்டணங்களின் விலை குறைவு. இதனால் சாமானிய மக்களும் அதிகம் பயன்படுத்தும் போக்குவரத்து முறையாக இந்திய ரயில்வே இருக்கின்றது. இதற்காக ரயில்வே துறை மக்களுக்குப் பல சலுகைகளையும், அறிவிப்புகளையும் வெளியிட்டுக் கொண்டு வருகிறது.
பயணிகள் ஒவ்வொருவரின் தேவைகளையும் நிறைவேற்ற ரயில்வே துறை பல முயற்சிகளை எடுத்து வருகின்றது. ரயிலில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பயணிக்கின்றனர். இதில் மூத்த குடிமக்கள் பயணம் செய்வதற்கு ஒரு சிறந்த சலுகையை ரயில்வே துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, ரயிலில் பயணிக்கும் மூத்த குடிமக்களுக்கு லோயர் பெர்த் கிடைப்பது குறித்து ரயில்வே துறை உறுதி செய்துள்ளது.
மூத்த குடிமக்களுக்கு லோயர் பெர்த் எளிதாக கிடைப்பது பற்றி ஐஆர்சிடிசி தனது இணையதளத்தில் விளக்கம் அளித்துள்ளது. சமீபத்தில் பயணி ஒருவர் தனது மாமாவிற்கு ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ததாகவும், கால் வலி காரணமாக அவருக்கு லோயர் பர்த்தைக் கேட்டும் ரயில்வே அவருக்கு அப்பர் பர்த்தை வழங்கியுள்ளது என்றும் ட்வீட் செய்துள்ளார்.
இதற்கு ரயில்வேத்துறை, “ஜெனரல் கேட்டகரியின் கீழ் ஒருவர் டிக்கெட் முன்பதிவு செய்தால், அதில் டிக்கெட் ஒதுக்கி இருந்தால் மட்டுமே ஒதுக்கீடு கிடைக்கும், இல்லை என்றால் அந்த சீட் கிடைக்காது. லோயர் பெர்த் ஒதுக்கப்பட்டு இருந்தால் மட்டுமே முன்பதிவு செய்ய முடியும்.
இந்த ஜெனரல் கேட்டகிரியில் புக் செய்தாலும் முதலில் வருபவர்களுக்குத் தான் முன்னுரிமை என்ற அடிப்படையில் சீட் கிடைக்கும். பொது ஒதுக்கீட்டில் சாதாரணமாக சீட் கிடைப்பதில் எந்த சிக்கலும் இருக்காது. இருந்தாலும், லோயர் பெர்த்தைப் பெறுவதற்கு நீங்கள் டிடிஇ-ஐத் தொடர்பு கொள்ளலாம். உங்களுக்கு லோயர் பெர்த் வேண்டும் என்று அவரிடம் கேட்டால் அவர் உங்களுக்கு லோயர் பெர்த்தை ஒதுக்கித் தருவார். இதனால் மூத்த குடிமக்களுக்கு லோயர் பெர்த் கிடைக்க வாய்ப்பு உள்ளது” என்று கூறியுள்ளது.