காலையில் எழுந்ததும் இதை செய்தால் வயிற்றில் அடைபட்டு கிடந்த கெட்ட வாயுக்கள் அனைத்தும் வெளியேறிவிடும்!!

Photo of author

By Divya

காலையில் எழுந்ததும் இதை செய்தால் வயிற்றில் அடைபட்டு கிடந்த கெட்ட வாயுக்கள் அனைத்தும் வெளியேறிவிடும்!!

இன்று சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் வாயுத் தொல்லையால் பெரும் அவதியடைந்து வருகின்றனர். வயிற்று பகுதியில் தேங்கி கிடக்கும் இந்த வாயுக்களை சிரமம் இன்றி வெளியேற்ற பாட்டி வைத்தியத்தை ட்ரை பண்ணுங்கள்.

1)ஓமம்
2)சீரகம்
3)இஞ்சி
4)பெருங்காயம்

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி சூடு படுத்தவும். பின்னர் அதில் 1/4 தேக்கரண்டி ஓமம், 1/4 தேக்கரண்டி சீரகம், ஒரு துண்டு இஞ்சி மற்றும் சிட்டிகை அளவு பெருங்காயம் சேர்த்து 5 நிமிடங்களுக்கு கொதிக்க விடவும்.

பிறகு அடுப்பை அணைத்து இதை ஒரு கிளாஸுக்கு வடிகட்டி காலையில் வெறும் வயிற்றில் குடித்தால் குடலில் தேங்கி கிடந்த கெட்ட வாயுக்கள் அனைத்தும் வெளியேறி விடும்.

1)எலுமிச்சை சாறு
2)பேக்கிங் சோடா

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடாக்கவும். தண்ணீர் நன்கு சூடானதும் இதை ஒரு கிளாஸிற்கு ஊற்றி 2 தேக்கரண்டி எலுமிச்சை சாறு மற்றும் 1 தேக்கரண்டி சோடா உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும். இதை உணவு உட்கொண்ட பின்னர் குடித்தால் வயிற்றில் தேங்கி கிடந்த வாயுக்கள் அனைத்தும் வெளியேறும்.

1)திரிபுலா பொடி
2)தண்ணீர்

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடாக்கவும். பிறகு அதில் ஒரு ஸ்பூன் திரிபுலா பொடி சேர்த்து 2 நிமிடங்கள் கொதிக்க விட்டு குடித்தால் மோசமான வாயுத் தொல்லைக்கு முழுமையான தீர்வு கிடைக்கும்.