இதை செய்தால் கொடிய விஷப் பாம்பு கடித்தாலும்.. உயிர் பிழைக்கலாம்!!

Photo of author

By Divya

இதை செய்தால் கொடிய விஷப் பாம்பு கடித்தாலும்.. உயிர் பிழைக்கலாம்!!

Divya

நமது இந்தியாவில் பல வகை பாம்புகள் வாழ்கின்றன.விஷப் பாம்பு,கொடிய விஷம் கொண்ட பாம்பு,விஷம் இல்லாத பாம்பு என்று பல வகை பாம்பு இனங்கள் உயிர் வாழ்கின்றன.இதில் அதிக விஷம் நிறைந்த பாம்பு இனங்களே நமது இந்தியாவில் காணப்படுகிறது.

இந்த விஷப் பாம்புகள் கடித்தால் உயிர் பிழைப்பது என்பது மிகவும் கடினமான விஷயமாக மாறிவிடும்.நம் நாட்டில் ஆண்டு தோறும் விஷப் பாம்பு கடியால் உயிரிழப்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது.நமது நாட்டில் மிகவும் கொடிய விஷம் நிறைந்த பாம்பு என்றால் அது ராஜநாகம் அதாவது கிங் கோப்ரா தான்.

நம் முன்னோர்கள் காலத்தில் பாம்பு கடித்தால் அதை குணப்படுத்திக் கொள்ள கை மருத்துவம்,சித்த மருத்துவ முறைகள் பின்பற்றப்பட்டது.ஆனால் தற்பொழுது அதன் மீதான நம்பிக்கை குறைந்து அலோபதி மருத்துவத்தை நாட ஆரம்பித்துவிட்டோம்.

இருவரை நாகப் பாம்பு கடித்தால் என்ன செய்ய வேண்டும் அதன் அறிகுறிகள் எப்படி இருக்கும் என்பது குறித்து தெரிந்து கொள்ளுங்கள்.

நாகப் பாம்பு கடித்தால் ஏற்படும் அறிகுறிகள்:

1)சுவாசம் சம்மந்தப்பட்ட பிரச்சனை

2)கை மற்றும் கால்கள் பலவீனமாதல்

3)செயல்பாட்டில் மாற்றம்

4)கண் பார்வை தெளிவின்மை

பாம்பு கடித்தவருக்கு செய்ய வேண்டிய உதவிகள்

1.பாம்பு கடித்த நபரை முதலில் ஓர் இடத்தில் அமர வைக்க வேண்டும்.அவரை நடக்கவோ,நிற்கவோ வைக்க கூடாது.

2.பாம்பு கடித்த இடத்தில் இறுக்கமான ஆடை இருந்தால் அதை அகற்ற வேண்டும்.அதேபோல் அணிகலன்கள் இருந்தால் அதையும் அகற்றிவிட வேண்டும்.

3.பாம்பு கடித்த நபருக்கு பயம்,பதற்றம் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.அவர்களை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் பணியை மேற்கொள்ள வேண்டும்.

4.பாம்பு கடித்த நபருக்கு சுய மருத்துவம் செய்தலை தவிர்க்க வேண்டும்.அதேபோல் சினிமாவில் காட்டுவது போன்று பாம்பு கடித்த இடத்தில் கீறல் போடுதல்,இரத்தத்தை உரிதல் போன்ற தவறான செயல்களில் ஈடுபடக் கூடாது.

பாம்பு கடித்த நபருக்கு செய்ய கூடாத விஷயங்கள்:

1.பாம்பு கடித்த இடத்தில் ஐஸ்கட்டி வைத்தல்,இறுக்கமான துணியை வைத்து கட்டுதல் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.

2.பாம்பு கடித்தவருக்கு டீ,காபி,மது போன்ற பானங்கள் கொடுப்பதை தவிர்க்க வேண்டும்.அதேபோல் பாம்பு கடித்த நபருக்கு பதற்றம் ஏற்படுத்தும் செயல்களில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும்.பாம்பு கடித்தால் மருத்துவமனைக்கு அழைத்து சென்று உடனடி சிகிச்சையை வழங்க உதவ வேண்டும்.