கண் திருஷ்டியை ஒழிக்கும் மந்திர மூட்டை!! இதை செய்தால் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும்!!

Photo of author

By Divya

கண் திருஷ்டியை ஒழிக்கும் மந்திர மூட்டை!! இதை செய்தால் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும்!!

குடும்பத்தில் பிரச்சனை,பணப் பிரச்சனை,தொழில் நஷ்டம்,அடிக்கடி உடல் நலக் கோளாறு ஏற்படுதல் ஆகியவை கண் திருஷ்டி ஏற்பட்டிருப்பதற்கான அறிகுறிகள் ஆகும்.இந்த கண் திருஷ்டியால் வீடு மட்டும் நீங்கள் தொழில் செய்யும் இடங்களில் அதிகளவு எதிர்மறை எண்ணங்கள் நிறைந்து இருக்கும்.

இந்த கண் திருஷ்டி பாதிப்பில் இருந்து மீள,மீண்டும் கண் திருஷ்டி ஏற்படாமல் இருக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறையை மாதம் ஒரு ஞாயிற்றுக் கிழமை அன்று வரவும்.இதற்கு தேவைப்படும் பொருட்கள் அடுப்புக்கரி,ஏலக்காய்,கிராம்பு,ஒரு சிவப்பு நிறத் துணி மற்றும் சாம்பிராணி பொடி.

முதலில் ஒரு சிவப்பு நிற காட்டன் துணி எடுத்து அதில் ஒரு தூண்டு அடுப்புக்கரி,ஒரு தேக்கரண்டி சாம்பிராணி பொடி,3 கிராம்பு மற்றும் 4 ஏலக்காய் போட்டு மூட்டை கட்டிக் கொள்ளவும்.இதை உங்கள் வீட்டு நிலை வாசலில் கட்டி தொங்க விடவும்.இவ்வாறு செய்வதால் உங்கள் வீட்டின் மீது ஏற்பட்டிருக்கும் கண் திருஷ்டி முழுமையாக நீங்கும்.இதேபோல் நீங்கள் தொழில் செய்யும் இடத்திலும் கட்டி தொங்க விடலாம்.

இந்த மூட்டையை மாதம் ஒரு ஞாயிற்று கிழமை அன்று மாற்றி விட வேண்டும்.இவ்வாறு செய்து வருவதன் மூலம் கண் திருஷ்டி பாதிப்பு முழுமையாக நீங்கும்