இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான பெண்கள் மாதவிடாய் வயிறு வலியை அனுபவித்து வருகின்றனர்.ஆரோக்கியம் குறைந்த உணவுகள் மற்றும் உடல் மாற்றங்களால் பெண்கள் பலவீனமடைகின்றனர்.
இதனால் மாதவிடாய் காலத்தில் வரும் வயிறு வலியை அவர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.சிலருக்கு கடுமையான வயிறு வலி ஏற்படும்.இனி வயிறு வலி மற்றும் வயிறு பிடிப்பு பிரச்சனையை சந்திக்காமல் இருக்க வேண்டுமென்றால் கீழே சொல்லப்பட்டுள்ளபடி செய்யுங்கள்.
தேவையான பொருட்கள்:-
1)கொய்யா இலை – 10
2)தேன் – ஒரு தேக்கரண்டி
3)தண்ணீர் – ஒரு கப்
செய்முறை விளக்கம்:-
பத்து பிஞ்சு கொய்யா இலையை தண்ணீரில் போட்டு சுத்தம் செய்து கொள்ளவும்.பிறகு பாத்திரத்தில் ஒரு கப் தண்ணீர் ஊற்றி கொய்யா இலையை கிள்ளிப் போட்டு கொதிக்க வைக்கவும்.
கொய்யா இலை வாசனை தண்ணீரில் முழுவதுமாக இறங்கும் வரை கொதிக்க வைத்த பிறகு அடுப்பை அணைக்கவும்.
பிறகு இந்த பானத்தை கிளாஸிற்கு பில்டர் செய்து தேன் சேர்த்து பருக வேண்டும்.மாதவிடாய் வருவதற்கு 10 நாட்களுக்கு முன்பில் இருந்து இந்த கொய்யா இலையில் தயாரிக்கப்பட்ட பானத்தை அருந்தி வந்தால் வயிறு வலி,வயிறு பிடிப்பு போன்றவற்றை சந்திக்காமல் இருக்க முடியும்.
அதேபோல் வெந்தயத்தை ஊறவைத்து மூளைக்கட்டி வைத்து பொடியாக்கி கொள்ள கொள்ள வேண்டும்.பிறகு இந்த வெந்தயப் பொடியை வைத்து தேநீர் செய்து பருகினால் மாதவிடாய் வயிறு வலி முற்றிலும் குணமாகிவிடும்.
அதேபோல் சூடான மூலிகை பானங்களை பருகினால் வயிறு வலியில் இருந்து விடுதலை கிடைக்கும்.க்ரீன் டீ,லெமன் கிராஸ் போன்ற பானங்கள் வயிறு வலியை குறைக்க உதவும்.மாதவிடாய் காலத்தில் குறைவான இரத்தப்போக்கு இருப்பவர்கள் கருப்பு எள்ளை கொதிக்க வைத்து பருகி வரலாம்.