நம் உடல் எலும்புகள் அடர்த்தியாக இருந்தால்தான் உடலில் செயல்பாடுகள் நன்றாக இருக்கும்.நிற்க,நடக்க,ஓட,அசைய அனைத்திற்கும் எலும்பு வலிமை அவசியம்.உடல் எலும்புகள் வலிமையாக மாற கால்சியம் சத்து மிகவும் அவசியமான ஒன்றாக திகழ்கிறது.நமது உடலுக்கு நாளொன்றில் சுமார் 1300 மில்லி கிராம் கால்சியம் சத்து அவசியம் தேவைப்படுகிறது.
இளமை காலத்தில் கால்சியம் சத்து,வைட்டமின் சி சத்து,ஒமேகா 3 கொழுப்பு அமிலம் ஆகியவை நிறைந்த உணவுகளை தினமும் சாப்பிட வேண்டும்.எலும்பு மஜ்ஜைகளை வலிமைப்படுத்தும் உணவுகளை உட்கொள்ள வேண்டும்.
உடல் எலும்புகளை வலிமையாக்கும் ஆரோக்கிய உணவுகள்:
1)வைட்டமின் சி சத்து நிறைந்த ஆரஞ்சு,எலுமிச்சை போன்ற பழங்களை ஜூஸாக செய்து குடித்தால் உடல் எலும்புகள் வலிமையாக இருக்கும்.
2)பால் மற்றும் பால் பொருட்கள்,சோயா பொருட்கள் ஆகியவற்றை சாப்பிட்டு வந்தால் உடலில் எலும்புகள் வலிமை அதிகரிக்கும்.
3)கால்சியம் சத்து நிறைந்த அத்திப்பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் உடல் எலும்புகள் வலிமை அதிகரிக்கும்.
4)கொய்யா,வாழைப்பழம்,ஆப்பிள் போன்றவற்றை சாப்பிட்டு வந்தால் எலும்பு வலிமை அதிகரிக்கும்.
5)முருங்கை கீரை,பாலக்கீரை,வெந்தயக் கீரை ஆகியவற்றை சாப்பிட்டு வந்தால் எலும்புகள் வலிமையாக இருக்கும்.
6)ராகி கஞ்சி,பாதாம் பால்,முந்திரி ஆகியவற்றை சாப்பிட்டு வந்தால் எலும்புகள் வலிமையாகும்.தினமும் இரண்டு பேரச்சம் பழத்தை பாலில் ஊறவைத்து சாப்பிட்டு வந்தால் எலும்புகள் வலிமையாக இருக்கும்.
7)உளுந்து களி,உளுந்து கஞ்சி ஆகியவை உடல் எலும்புகளை வலிமையாக வைத்துக் கொள்ள உதவுகிறது.
8)வைட்டமின் டி சத்து நிறைந்த உணவுகளை உட்கொண்டால் எலும்பு அடர்த்தி அதிகரிக்கும்.பிரண்டையை சாப்பிட்டு வந்தால் எலும்பு வலிமை அதிகரிக்கும்.ஆட்டுக்காலில் சூப் செய்து சாப்பிட்டு வந்தால் எலும்புகள் கூடும்.