வாக்கிங் போறவங்க இதை செய்தால்.. உடல் எடையியில் ஒரு கிராம் கூட குறையாது!! நீங்க என்ன தப்பு பண்றிங்கன்னு தெரிஞ்சிக்கோங்க!!

Photo of author

By Divya

வாக்கிங் போறவங்க இதை செய்தால்.. உடல் எடையியில் ஒரு கிராம் கூட குறையாது!! நீங்க என்ன தப்பு பண்றிங்கன்னு தெரிஞ்சிக்கோங்க!!

Divya

குழந்தைகள்,இளம் வயதினர்,முதியவர்கள் என்று அனைவரும் தங்கள் உடல் எடையை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள வேண்டியது முக்கியம்.நமது உடல் எடை பராமரிப்பில் கவனம் செலுத்தினால் நோய் பாதிப்புகளில் இருந்து நம்மை காத்துக் கொள்ள முடியும்.

உடல் எடையை கட்டுக்குள் வைத்துக் கொள்ள ஆரோக்கிய உணவு முறைகளை பின்பற்ற வேண்டும் என்பது அணைவருக்கும் தெரிந்த ஒரு விஷயம்தான்.அதேபோல் நடைபயிற்சி,ஓட்டப்பயிற்சி போன்றவற்றை செய்வதன் மூலம் உடல் எடையை நம் கட்டுப்பாட்டில் கொண்டு வர முடியும்.

ஓட்டப்பயிற்சியைவிட நடைபயிற்சியை மேற்கொண்டால் உடலில் அதிகளவு கலோரி எரிக்கப்படும் என்பது ஆய்வின் மூலம் தெரிய வந்திருக்கிறது.தினமும் குறைந்தது அரை மணி நேரம் நடந்தால் 400 கலோரிகள் வரை குறையும்.

அதிகாலை நேரத்தில் உடற்பயிற்சி செய்தால் உடலிலுள்ள கெட்ட கொழுப்பு கரைந்துவிடும்.அதிகாலை நேரத்தில் நடப்பதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.சிலர் மணி கணக்கில் நடைபயிற்சி செய்தும் உடல் எடை குறையவில்லை என்று புலம்புகின்றனர்.இதற்கு காரணம் அவர்கள் சரியான உணவுமுறை பழக்கத்தை கடை பிடிக்காததுதான்.

நடைபயிற்சியுடன் நாம் ஆரோக்கிய உணவு பழக்கத்தை பின்பற்ற வேண்டும்.எண்ணெய் இல்லாத உணவுகள்,ஆவியில் வேகவைக்கப்பட்ட உணவுகளை சாப்பிட்டால் உடல் எடை கட்டுக்குள் இருக்கும்.ஆனால் சிலர் கஷ்டப்பட்டு நடைபயிற்சி செய்துவிட்டு உடல் எடை குறையவில்லை என்று வருத்தப்படுகின்றனர.இதற்கு காரணம் அவர்கள் சரியான டயட் மற்றும் தூக்கத்தை கடைபிடிப்பதில்லை.

தினமும் 30 நிமிடங்கள் நடந்தால் சர்க்கரை மற்றும் இதய நோய் அபாயத்தில் இருந்து தப்பிக்கலாம்.தினமும் நடைப்பயிற்சி மேற்கொள்பவர்களுக்கு நன்றாக தூக்கம் வருகிறது ஆய்வின் மூலம் தெரிய வந்திருக்கிறது.

வாக்கிங் சென்று வந்த பிறகு எண்ணெய் உணவுகளை சாப்பிடுதல்,தூங்குதல்,அதிக உணவுகளை உட்கொள்ளுதல் போன்றவற்றை செய்தால் நடைபயிற்சி பலனை முழுமையாக அனுபவிக்க முடியாது.உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் தினமும் நடைபயிற்சி செய்ய வேண்டும்.அதிக கலோரி நிறைந்த உணவுகளை தவிர்க்க வேண்டும்.பகல் நேரத்தில் உறங்குதல்,அதிக உணவு சாப்பிடுதல்,நொறுக்கு தீனி சாப்பிடுதல் போன்றவற்றை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.