இதை செய்தால் உங்கள் பேங்க் பேலன்ஸ் ஜீரோ ஆகிவிடும்.. நெட் பேங்கிங் யூஸ் பண்ணுபவர்கள் கவனத்திற்கு!!
இன்றைய நவீன உலகம் எந்த ஓர் இடங்களுக்கும் எளிதில் பணம் அனுப்பும் அளவிற்கு வளர்ச்சியை கண்டுள்ளது.தற்பொழுது பணத்தாள்கள் பயன்படுத்துவது குறைந்து மெல்ல மெல்ல டிஜிட்டல் பரிவர்த்தனையை நோக்கி உலகம் நகர்ந்து கொண்டிருக்கிறது.சிறு பெட்டி கடைகள் முதல் பெரிய மால்கள் வரை ஆன்லைன் பரிவர்த்தனை மேற்கொள்ளப்படுவதால் இந்திய பொருளாதாரம் வேகமாக முன்னேறி வருகிறது.
ஆனால் எந்த அளவிற்கு வளர்ச்சி இருக்கிறதோ அந்தளவிற்கு ஆபத்துகள் நிறைந்திருக்கும் என்பதை மறந்து விடாதீர்கள்.ஆன்லைன் பண மோசடி குறித்த புகார் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.அதிலும் நெட் பேங்கிங் பண மோசடி குறித்த புகார்களே அதிகளவு குவிகிறது.நெட் பேங்க் யூசர்களின் அலட்சியம் தான் இந்த மோசடிக்கு காரணம் என்று சொல்லப்படுகிறது.
வளர்ந்து வரும் AI தொழில்நுட்பத்தால் ஹாக்கிங் செய்வது எளிதாகி விட்டது.எனவே வீக்கான உங்கள் பேங்கிங் பாஸ்வேர்டை ஸ்ட்ராங்காக மாற்றுங்கள்.இலவசமாக கிடைக்கும் WIFI பயன்படுத்தி பணப் பரிமாற்றம் செய்வதை தவிருங்கள்.இலவச WIFI மூலம் உங்கள் பண பரிமாற்றங்கள் ஹேக் செய்ய வாய்ப்பிருக்கிறது.உங்கள் மொபைலுக்கு வங்கி சாராத எண்ணில் இருந்து SMS வந்தால் கிளிக் செய்து விடாதீர்கள்.
உங்கள் லேப்டாப் மற்றும் கணினியின் சாப்ட்வேரை அப்டேட் செய்யுங்கள்.இல்லையேல் உங்கள் பண பரிவர்த்தனை ஈஸியாக ஹேக் செய்யப்பட்டு விடும்.அதேபோல் உங்கள் வங்கி கணக்கு எண்,ATM பின் நம்பர்,OTP உள்ளிட்டவற்றை எவரிடமும் பகிர்ந்து கொள்ளாதீர்கள்.இதனால் பண மோசடி நிகழ அதிக வாய்ப்பிருக்கிறது.உங்களில் மொபைல் மற்றும் லேப்டாப்பில் வங்கி கணக்கு எண்,பரிவர்த்தனை கடவுச்சொல்லை சேமித்து வைத்திருந்தால் அதை முறையாக டெலிட் செய்து விடுங்கள்.இல்லையேல் பண மோசடி நடக்க அதிக வாய்ப்பிருக்கிறது.