இந்த ஒரு பொருளை தனமாக பசுவிற்கு தானம் செய்தால் தீராத கடனும் தீர்ந்து பணம் பெருகும்..!!

Photo of author

By Divya

இந்த ஒரு பொருளை தனமாக பசுவிற்கு தானம் செய்தால் தீராத கடனும் தீர்ந்து பணம் பெருகும்..!!

இன்றைய உலகில் நம் அனைவருக்கும் பணம் மிகவும் அவசியமான ஒன்றாகி விட்டது. நாம் சம்பாதிக்கும் பணத்தில் சிறிய தொகையை சேமிப்பாக எடுத்து வைத்தால் தான் அவசர காலத்தில் நாம் யாரிடமும் கடன் வாங்காமல் இருக்க முடியும். ஆனால் பலர் இந்த சேமிப்பை செய்யாமல் இருப்பதால் தான் கடனில் சிக்கி விடுகிறோம்.

பாசிப் பருப்பை பசுவிற்கு தானம் செய்தால் இந்த கடன் சுமை, பணப் பிரச்சனை உள்ளிட்டவை நீங்கி பணம், செல்வம் பெருகும். இந்த பாசிப் பருப்புடன் வெல்லம் அல்லது நாட்டு சர்க்கரை சேர்த்து பசுவிற்கு சாப்பிட கொடுத்தால் இன்னும் சிறப்பு.

தேவையான பொருட்கள்:-

*பாசிப்பருப்பு

*வெல்லம்

*தண்ணீர்

செய்முறை…

வீட்டில் ஒரு சிறிய தட்டில் ஒரு கைப்பிடி அளவு பாசிப்பருப்பு போட்டு அதன் மேல் ஒரு அகல் விளக்கில் சிறிது நெய் ஊற்றி சிவப்பு திரி போட்டு தீபம் ஏற்றவும்.

தீபம் ஏற்றிய பிறகு இரவு அந்த பாசிப்பருப்பை ஊற வைத்து மறுநாள் வெல்லம் கலந்து அதை பசுவிற்கு தானம் செய்தால் தீராத கடன் பிரச்சனையும் தீர்ந்து பணம் பெருகி கொண்டே இருக்கும்.