பள்ளிக்கு 10 மணிக்கு முன்பாக வரவில்லை என்றால் ஆசிரியர்கள் சம்பளம் கட்.. பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட முக்கிய தகவல்!!
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு பள்ளி கல்வித்துறையில் பல்வேறு திட்டங்களை வகுத்ததுடன் பல்வேறு கட்டுப்பாடுகளையும் அமல்படுத்தி வருகிறது.அந்த வகையில் நேற்று அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளி கல்வித்துறை சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியது.
அதில் தலைமை ஆசிரியர் என தொடங்கி உடற்கல்வி, சிறப்பு ஆசிரியர்கள் என அனைவரும் பள்ளி ஆரம்பிக்கும் நேரத்திற்கு முன்பாகவே வர வேண்டும் என்று நிபந்தனைகளை கூறியதுடன் இது பள்ளி நிர்வாகம் மற்றும் மாணவர்களின் நலனை பாதுகாக்க இவ்வாறு புதிய நெறிமுறைகள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
இவ்வாறான சுற்றறிக்கை வெளிவந்தவுடன் ஆசிரியர்கள் பள்ளி நேரத்திற்கு முன்பாக அதாவது 10 மணிக்கு முன்பாக பள்ளிகளில் இல்லாவிட்டால் அவர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும் என்ற ஒரு தகவலும் அடுத்தடுத்த பரபரப்பாக வெளிவந்தது.
ஆனால் இது பள்ளிக்கல்வித்துறை சார்பாக எந்த ஒரு அதிகாரப்பூர் தகவலும் இவ்வாறு வெளியிடவில்லை. இருப்பினும் சமூக வலைத்தளம் என தொடங்கி அனைத்திலும் இது குறித்த தகவல் வெளியாகி ஆசிரியர்கள் இடையே குழப்பத்தை ஏற்படுத்தியது.
இதனை அறிந்த பள்ளிக்கல்வித்துறை இவ்வாறு இணையதளம் மூலம் பரவும் 10 மணிக்கு முன்பாக பள்ளிக்குள் ஆசிரியர்கள் இருக்க வேண்டும் இல்லை என்றால் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும் என்பது தவறான தகவல் இதனை யாரும் உண்மை என்று நம்ப வேண்டாம் என தெரிவித்துள்ளனர்.